2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

2ஆம் நாளில் பங்களாதேஷிற்கெதிராக நியூசிலாந்து நிதான ஆட்டம்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 22 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும், பங்களாதேஷ் அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
 
5 விக்கெட்டுக்களை இழந்து 228 ஓட்டங்களுடன் இன்றைய நாள் ஆட்டத்தை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 282 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
 
இறுதி விக்கெட்டுக்களை இலகுவாக இழந்த அவ்வணி, தனது இறுதி 5 விக்கெட்டுக்களையும் 36 ஓட்டங்களுக்கு இழந்திருந்தது.
 
துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பாக தமிம் இக்பால் 95 ஓட்டங்களையும், மொமினுல் ஹக் 47 ஓட்டங்களையும், மார்ஷல் அயுப் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக நீல் வக்னர் 5 விக்கெட்டுக்களையும், இஷ் சோதி 3 விக்கெட்டுக்களையும், ட்ரென்ட் போல்ட்ற், கொரே அன்டர்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
 
தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டதன் காரணமாக இன்றைய நாள் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.
 
32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து அவ்வணி தடுமாறியதோடு, 76 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது பந்து முகத்தைத் தாக்கியதால் கேன் வில்லியம்சன் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டியேற்பட்டது. ஆனால் 3ஆவது விக்கெட்டாக பிரென்டன் மக்கலம் ஆட்டமிழக்க கேன் வில்லியம்சன் மீண்டும் துடுப்பாடக் களமிறங்கினார்.
 
துடுப்பாட்டத்தில் றொஸ் ரெய்லர் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக வீழ்த்தப்பட்ட 3 விக்கெட்டுக்களையும் ஷகிப் அல் ஹசன் வீழ்த்தினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .