2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உலக கிண்ண கால்பந்து போட்டி வெற்றி யாருக்கு?

Menaka Mookandi   / 2010 ஜூலை 11 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கால்பந்து போட்டித் தொடர், தென் ஆபிரிக்காவில் இன்று வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவடையவுள்ளது. இன்று நள்ளிரவு ஆரம்பிக்கவுள்ள இறுதிப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய இரண்டு அணிகளும் மோதவுள்ளன.

கடந்த மாதம் 11ஆம் திகதி, தென்னாபிரிக்காவில் கோலாகலமாக ஆரம்பமான 19ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டியில், 32 அணிகள் பங்கேற்ற நிலையில் போட்டியின் முன்னணி அணிகளான இத்தாலி, பிரான்ஸ், பிரேசில், ஆர்ஜன்டீனா, ஜேர்மன், உருகுவே  போன்ற அணிகள் படுதோல்வியடைந்தன.

இந்நிலையில், இன்று நள்ளிரவு ஆரம்பிக்கவுள்ள பரபரப்பான  இறுதிப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே இதுவரை உலகக் கிண்ணத்தை வெகைப்பற்றாதமையினால், புதிய அணியொன்று சாம்பியன் பட்டத்தை வெல்வது உறுதியாகியுள்ளது.

ஜோகன்னஸ்பர்க், சொக்கர் சிட்டி மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு முன்னதாக, வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .