2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சூதாட்ட முகவருடன் காணப்பட்ட வீரர் தில்ஷான் : பிரித்தானிய பத்திரிகை

Super User   / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்தில் நடைபெற்ற ட்வெண்டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின்போது சூதாட்ட முகவர்களை சந்தித்த இலங்கை வீரர் திலகரட்ண தில்ஷான் என பிரிட்டனின் டெய்லி மெயில் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் ஒருவரை ஐ.சி.சி. ஊழல் எதிர்ப்பு பிரிவினர் கண்காணித்து வருவதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் எதிர்ப்பு பிரிவுக்கு இலங்கை கிரிக்கெட் சபையினால் அனுப்பப்பட்ட அறிக்கையொன்றில் தில்ஷானின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாக டெய்லி மெயில் பத்திரிகை தெரிவித்துள்ளது.

லண்டன் இரவு விடுதியொன்றில் சட்டவிரோத சூதாட்ட முகவர் ஒருவருடன் தில்ஷான் காணப்பட்டார் என்ற சக வீரர்களின் சந்தேகம் குறித்து இலங்கை அணித்தலைவர் குமார் சங்கக்கார இலங்கை அணி நிர்வாகத்திற்கு அறிவித்தபின், அணி நிர்வாகத்தினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

எனினும் டில்ஷான் தவறு எதையும் செய்யவில்லை என தில்ஷானுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

"எந்தவொரு இலங்கை வீரரருக்கு எதிராகவும் ஆதாரங்கள் எதுவுமில்லை. அவர்கள் எவரும் குற்றவாளிகள் அல்லர். உலகக்கிண்ணப் போட்டிகளுக்கான இலங்கை அணியின் திட்டங்களை குழப்பும் நோக்குடன் மனசாட்சியற்ற சிலரின் குற்றச்சாட்டுகளே இவை" என இலங்கைக் கிரிக்கெட் அணியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X