2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை: சனத்

Super User   / 2010 செப்டெம்பர் 17 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

  alt                         

                                             (கே.எஸ். வதனகுமார், றிபாயா நூர்)

கடந்த யுத்தத்தினால் மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக  மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நட்சத்திர கிரிக்கெட் வீரருமான சனத் ஜெயசூரிய தெரிவித்தார்.

பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் சகோதரர் ரெஜி ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி இன்று கிரானில் இடம்பெற்ற போது, பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், கடந்த 30 வருட யுத்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுத்துறை பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. இதனை அபிவிருத்தி செய்வதற்கு பல திட்டங்களை வகுத்து செயற்படுத்தப்படவுள்ளது என்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலைமறை காயாக உள்ள வீரர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து  அதனுடாக சர்வதேச ரீதியாக இலங்கைக்குப் புகழை பெற்றுக் கொடுப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க  உள்ளதாகவும்  சனத் ஜெயசூரிய தெரிவித்தார்.

இது விடயமாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் கலந்துரையாடியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிரான் பிரதேசத்துக்கு சென்ற சனத் ஜெயசூரிய மற்றும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு அப்பிரதேச மக்களால் உற்சாகமான வரவேற்பளிக்கப்பட்டது.

கிரான் பிரதேசத்திலுள்ள இந்து ஆலயத்தில் மத வழிபாடுகளில் கலந்து கொண்ட ஜெயசூரிய மற்றும் பிரதியமைச்சர் முரளிதரன் ஆகியோர் அங்கிருந்து விளையாட்டு மைதானம் வரை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

alt

alt

alt

alt




 


You May Also Like

  Comments - 0

  • mohamed sulfikkar Monday, 27 September 2010 09:48 PM

    very good

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X