2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தர்ஷினி சிவலிங்கத்தின் உதவியுடன் தேசிய வலைப்பந்தாட்டச் சம்பியனாகியது செலான் அணி

Super User   / 2010 செப்டெம்பர் 19 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அசங்க கம்மன்பில)

இலங்கை வலைப்பந்தாட்டச் சம்மேளனம் நடத்திய 13 ஆவது தேசிய வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் செலான் வங்கி அணி சம்பியனாகியுள்ளது.

ஆசியாவின் அதி உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனையான தர்ஷினி சிவலிங்கம், செலான் வங்கி அணியின் வெற்றிக்கு பெரும்பங்காற்றியமை குறிப்பிடத்தக்கது.

கண்டி நித்தவெல றக்பி விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஹட்டன் நெஷனல் வங்கி அணியுடன் செலான் வங்கி மோதியது.

அண்மையில் திருமலையில் நடைபெற்ற கழகங்களுக்கிடையிலான சுற்றுப்போட்டியிலும் இவ்விரு அணிகளே மோதி செலான் வங்கி சம்பியனாகியிருந்தது.

இந்நிலையில், இன்றைய போட்டி கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும்  செலான் வங்கி அணியின் 6 அடி 10 அங்குல உயரமான கோல் ஷூட்டர் தர்சினி சிவலிங்கத்தின் கோல் புகுத்தும் வேகம் அவ்வணியை இத்தொடரின் உயரே கொண்டு சென்றது.


இறுதியில் 78-57 விகிதத்தில் செலான் வங்கி அணி சம்பியனாகியது. இவ்வருடம் செலான் வங்கி அணி சம்பியனாகிய மூன்றாவது வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி இதுவாகும்.

இச்சுற்றுப்போட்டியின் சிறந்த கோல் புகுத்தும் வீராங்கனையாக தர்ஷினி சிவலிங்கம் தெரிவானார். சுற்றுப்போட்டியின் வலைப்பந்தாட்ட ராணியாக அதே அணியைச் சேர்ந்த  ஜயலிய குமாரி தெரிவானார்.

சிறந்த கோல் காப்பு வீராங்கனையாக விமானப் படை அணியைச் சேர்ந்த தம்மிகா மல்காந்தி தெரிவானார்.

சிறந்த மத்திய கள வீராங்கனையாக செலான் வங்கி அணியின் சதுனி போலாகல தெரிவானார்.

சிறந்த தாக்குதல் வீராங்கனையாக ஹற்றன் நெஷனல் வங்கியின் தர்ஷினி அபேவிக்கிரம தெரிவானார்.

சிறந்த வளர்முக வீராங்கனைக்கான விருதை கண்டி விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த பிரசாதிக்கா நுவன்திகா தெரிவானார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .