2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'இலங்கை வாபஸ் பெறவில்லை'

Super User   / 2010 ஒக்டோபர் 03 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2018 ஆம் ஆண்டு பொதுநலவாயப் போட்டிகளை நடத்துவதற்கான உரிமையப் பெறும் முயற்சியிலிருந்து இலங்கை வாபஸ் பெறவில்லை என அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநில பதில் பிரதமர் போல் லூகாஸ் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு இலங்கையின் அம்பாந்தோட்டை நகரமும் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள கோல்ட் கோஸ்ட் நகரமும் போட்டியிடுகின்றன.

பொதுநலவாய விளையாட்டுச் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் 71 நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் குயின்ஸ்லாந்து பிரதமர் அனா பிளிக் தலைமையிலான நால்வர் கொண்ட குழுவினர் தமது இப்போட்டியை நடத்துவதற்கான தமது திட்டம் குறித்து விபரித்தனர்.

இலங்கை இதுவரை அதைச் செய்யவில்லை. எனினும் நிச்சயமாக இலங்கை இப்போட்டிகளை நடத்தும் முயற்சியிலிருந்து  வாபஸ் பெறவில்லை எனவும் இது குறித்து தாம் அவதானமாக இருப்பதாகவும்  போல் லூகாஸ் தெரிவித்துள்ளார்.

"இப்போட்டிகளை நடத்தும் உரிமயைப் பெறுவதற்கு நாமும் இலங்கையும் மட்டும் போட்டியிட்டாலும் அல்லது 10 நாடுகள் போட்டியிட்டாலும் நாம் ம்மல் முடிந்தளவு கடுமையாக பாடுபடுவோம் என லூகாஸ் கூறினார்.

சுற்றுலாத்துறை நன்மைகள் அடிப்படையில் இது மிக மிக முக்கியமானது" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .