2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நியூஸிலாந்து அணியை மீண்டும் வென்றது பங்களாதேஷ்

Super User   / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

நியூஸிலாந்து அணியுடனான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது.

பங்களாதேஷின் மீர்பூர் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் பங்களாதேஷ் அணி 9 ஓட்டங்களால் வென்றது. அணித்தலைவர் சகீப் அல் ஹசன் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் பிரகாசித்து தனது அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி  44 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 3 ஆவது விக்கெட்டை இழந்தது. பின்னர் 48.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 241  ஓட்டங்களைப் பெற்றது.

அணித்தலைவர் சகீப் அல் ஹசன் 106 ஓட்டங்களையும் இம்ருள் காயீஸ் மஹ்மதுல்லா ஆகியோர் தலா 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் சார்பில் அறிமுக வீரரான ஹமீஸ் பென்னொட் 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மில்ஸ், டஃப்பி, வெட்டோரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியில் வில்லியம்ஸன் 108 ஓட்டங்களைப் பெற்றார். 9 ஆவது வரிசை வீரர் மெக்கலம் 33 ஓட்டங்களைப் பெற்றார். எனினும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.  இதனால்  49.3 ஓவர்களில் 232 ஓட்டங்களைப்பெற்ற நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது நியூஸிலாந்து அணி.

பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களில் அணித்தலைவர் சகீப் அல் ஹசன் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சகீப் அல் ஹசன் இப்போட்டியின் சிறப்பாட்டக் காரராகத் தெரிவானார்.

இத்தொடரின் இரண்டாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. ஏனைய மூன்று போட்டிகளிலும் பங்களாதேஷ் அணியே வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதனால் இத்தொடரின் வெற்றியையும் பங்களாதேஷ் அணி சுவீகரித்துள்ளது.
ஐந்தாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .