2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தேசிய விளையாட்டு விழாவில் மேல் மாகாணம் முன்னிலையில்

Super User   / 2010 ஒக்டோபர் 31 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(மொஹொமட் ஆஸிக்)

இலங்கையின் 36 வது தேசிய விளையாட்டு விழாவின் இரண்டாவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை  முடிவில் 46 தங்க பதக்கங்களையும் 30 வெள்ளி பதக்கங்களையும் 30 வெண்கல் பதக்கங்களையும் பெற்று மேல் மாகாணம் முன்னிலையில் உள்ளது.

நேற்று 30ஆம் திகதி ஆரம்பமான தேசிய விளையாட்டு விழா நாளை நிறைவுபெறூம்.

இரண்டாவது நாளான இன்றைய முடிவின் போது

16 தங்கப் பதக்கங்களையும் 18 வெள்ளி பதக்கங்களையும் 19 வெண்கல பதக்கங்களையும் பெற்று மத்திய மாகாணம் இரண்டாவது இடத்தை பெற்றிருந்தது. 15 தங்கப் பதக்கங்களையும் 11 வெள்ளி பதக்கங்களையும் 16 வெண்கல  பதக்கங்களையும் பெற்று வட மேல் மாகாணம் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.

இவ்விளையாட்டு  விழாவில் ஏனைய மாகாணங்கள் பெற்ற பதக்கங்களின் நிலை இதுவாகும்.

தென் மாகாணம் 10 தங்கப் பதக்கங்கள், 17 வெள்ளிப் பதக்கங்கள், 12 வெண்கல பதக்கங்கள்.

ஊவா மாகாணம் 6 தங்கப் பதக்கங்கள், 6 வெள்ளிப் பதக்கங்கள், 15 வெண்கல பதக்கங்கள்.

சபரகமுவ மாகாணம் 4 தங்கப் பதக்கங்கள் 6 வெள்ளிப் பதக்கங்கள், 7 வெண்கல பதக்கங்கள்.

வட மத்திய மாகாணம் 3 தங்கப் பதக்கங்கள் 9 வெள்ளிப் பதக்கங்கள், 17 வெண்கல பதக்கங்கள்.

கிழக்கு மாகாணம் 2 தங்கப் பதக்கங்கள், 3 மூன்று வெள்ளிப் பதக்கங்கள், ஒரு வெண்கல பதக்கம்.

வட மாகாணம் ஒரு வெள்ளி பதக்கம் ஒரு வென்கள பதக்கம்.

இவ்விளையாட்டு விழாவின் நிறைவு நிகழ்வுகள் நாளை மாலை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.


 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .