2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்

Super User   / 2010 நவம்பர் 12 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

16 ஆவது ஆசிய விளையாட்டு விழா சீனாவின் குவாங்ஸோ நகரில் இன்றிரவு கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. சீனாவின் பிரதமர் வென் ஜியாபோ ஆரம்ப வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸிவ் அலி சர்தாரி உட்பட பல நாடுகளின் அரசியல் தலைவர்களும் இவ்பைவத்தில் அதிதிகளாக பங்குபற்றினர்.

எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் 20 ஓவர் கிரிக்கெட் உட்பட 42 வகை விளையாட்டுகளில் 476 விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. இதனால் வரலாற்றின் மிகப்பெரிய ஆசிய விளையாட்டு விழாவாக குவாங்ஸோ ஆசிய விளையாட்டு விழா அமையவுள்ளது.

3,989 பதக்கங்கள் இவ்விழாவில் வழங்கப்படவுள்ளன. இதற்காக 45 நாடுகளைச் சேர்ந்த 9,704 போட்டியாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஆசிய விளையாட்டு விழா தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக உலகெங்கிலுமிருந்து 887 ஊடகங்களைச் சேர்ந்த 9,585 ஊடகவியலாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
ஆசிய விளையாட்டு விழாவையொட்டிய பாதுகாப்புப் பணிகளுக்காக சுமார் ஒரு லட்சம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் சார்பில் 104 போட்டியாளர்கள் பங்குபற்றுகின்றனர். இப்போட்டிகளில் குறைந்தபட்சம் 4 பதக்கங்கள் இலங்கைக்கு கிடைக்கும் என இலங்கைக் குழுவின் தலைவர் பிரேமா பின்னவெல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • Thakshanamoorthy Saturday, 13 November 2010 03:32 AM

    எமது விளையாட்டு வீரர்களுக்கு நல் வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .