2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பீட் சாம்ப்ராஸின் சம்பியன் கிண்ணங்கள் திருட்டு

Super User   / 2010 டிசெம்பர் 09 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்காவின் மிகப் புகழ்பெற்ற டென்னிஸ் வீரரான பீட் சாம்ப்ராஸ் சர்வதேச போட்டிகளில் வென்ற சம்பியன் கிண்ணங்களும் அவர் பெற்ற நினைவுப் பொருட்களும் திருடப்பட்டுள்ளன.

14 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் சம்பியனாகி சாதனை படைத்தவர் பீட் சாம்ப்ராஸ். இந்நிலையில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வாடகைக் களஞ்சிய நிலையமொன்றில் வைக்கப்பட்டிருந்த தனது  சம்பியன் கிண்ணங்கள் பல காணாமல் போயுள்ளதாக பீட் சாம்ப்ராஸ் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய பகிரங்க சம்பியன் கிண்ணமொன்று, டேவிஸ் கிண்ண சம்பியன் கிண்ணங்கள் 2 ஆகியனவும் காணாமல் போன பொருட்களில் அடங்கும் என சாம்ப்ராஸ் தெரிவித்துள்ளார்.

"எனது 14 கிராண்ட்ஸ்லாம் சம்பியன் கி;ண்ணங்களில் 13 கிண்ணங்கள் எஞ்சியிருக்கின்றன. ஆனால் எனது முதலாவது அவுஸ்திரேலிய பகிரங்க கிண்ணம் காணாமல் போயுள்ளது. இத்தகைய பொருட்களை இழப்பது எனது டென்னிஸ் வரலாற்றையே பறித்துக்கொள்வது போலத்தான்" என பீட் சாம்ப்ராஸ் நேற்று தெரிவித்துள்ளார்.
 
39 வயதான சாம்ப்ராஸ், நடிகை பிரிஜட் வில்ஸனை திருமணம் செய்து 2 குழந்தைக்கு தந்தையாகவுள்ளார். 2002 ஆம் ஆண்டு போட்டிகளிலிருந்து அவர் ஓய்வு பெற்றார். இரு தடவை வீடு மாறிய நிலையில் தனது பரிசுப்பொருட்களை அவர் களஞ்சியசாலையொன்றில் வைத்திருந்தார்.

"எனது சம்பியன் கிண்ணங்கள் குறித்து நான் பெருமிதம் கொள்வதில்லை. ஆனால் எனது குழந்தைகள் அவற்றை பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். அவர்கள் நான் விளையாடியதைப் பார்க்கவில்லை. எனவே இப் பரிசுப் பொருட்களை அவர்கள் பார்க்க வேண்டும். என குழந்தைகளுக்காக வைத்திருப்பதால் அவற்றை விலை மதிப்பற்றதாகக் கருதுகிறேன்" என சாம்ப்ராஸ் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .