2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தென்னாபிரிக்க அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி

Super User   / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி ஓர் இன்னிங்ஸ் மற்றும் 25 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

சென்சூரியனில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 136 ஓட்டங்களையும் தென்னாபிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 620 ஓட்டங்களையும் பெற்றன.

 நான்காவது நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 454 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்ப்பதற்கு அவ்வணிக்கு மேலும் 30 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இன்று திங்கட்கிழமை காலை எஞ்சியிருந்த இரு விக்கெட்டுகளையும் 5 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து தென்னாபிரிக்கா அணி வீழ்த்தியது. சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் 111 ஓட்டங்களைப் பெற்றார்.

தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களில்  டேல் ஸ்டெய்ன் 104 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழத்தினார்.  இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக தென்னாபிரிக்க வீரர் ஜக்கலிஸ் தெரிவானார்.

3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி டர்பன் நகரில் ஆரம்பமாகவுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .