2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இரண்டாவது வெற்றியை பதிவுசெய்தது நடப்பு சம்பியன்

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 25 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரெலிய, நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் இன்று காலை நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.

உலககிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் 8ஆவது போட்டி அவுஸ்திரேலிய அணிக்கும் நியூஸிலாந்து அணிக்குமிடையின் இன்று காலை நாக்பூர் விதர்பா கிரிக்கெட் கழக மைதானத்தில் இடம்பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணியினர் 45.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 206 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. நியூஸிலாந்து அணி சார்பில் நதன் மக்கலம் அதிகபட்சமாக 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். அவுஸ்திரேலிய அணியின் மிச்சேல் ஜோன்சன் 9.1 ஓவர்கள் பந்துவீசி 33 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 34 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை இலகுவாக தொட்டது. அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஷேன் வட்சன் மற்றும் பிறட் ஹட்டின் ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 133 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். இதில் ஷேன் வட்சன் ஒரு சிக்ஸர் 6 பௌண்டரிகள் அடங்களாக 61 பந்துகளை எதிர்கொண்டு 65 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், பிறட் ஹட்டின் 8 பௌண்டரிகள் அடங்கலாக 50 பந்துகளை எதிர்கொண்டு 55 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக அவுஸ்திரேலிய அணியின் மிச்சேல் ஜோன்ஸன் தெரிவுசெய்யப்பட்டார். Pix: AFP


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X