2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இறுதிப்போட்டி சமநிலையில் முடிய வேண்டும்: முரளியின் மாமியார்

Super User   / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை -  இந்திய அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டி சமநிலையில் முடிவடைய வேண்டும் என தான் விரும்புவதாக இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் மாமியாரான டாக்டர் நித்தியா ராமமூர்த்தி கூறியுள்ளார்.

அதேவேளை சச்சின் டெண்டுல்கர் தனது 100 ஆவது சர்வதேச சதத்தை இப்போட்டியில் பெற வேண்டும் என தான் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

முரளிதரனின் மனைவி மதிமலரின் தாயாரான டாக்டர் நித்தியா ராமமூர்த்தி சென்னையில் பிரபலமான மருத்துவர் ஆவார்.
தனது மகள் மதிமலர் முத்தையா முரளிதரனை திருமணம் செய்து இலங்கை மருமகள் ஆகிவிட்ட நிலையில் எந்த அணிக்கு ஆதரவளிப்பது என்பதில் டாக்டர் நித்தியாவுக்கு தடுமாற்றம்.

தனது தாய்நாடான இந்திய அணிக்காக அல்லது மருமகனின் இலங்கை அணிக்காக ஆதரவளிப்பீர்கள் என டாக்டர் நித்தியா ராமமூர்த்தியிடம் கேட்டபோது, அது கடினமான ஒரு கேள்வி என பதிலளித்துள்ளார்.

'இந்திய பாரம்பரியத்தின்படி, எனது மகள் வெளிப்படையாகவே தனது கணவரின் அணிக்கு ஆதரவளிப்பார். நானும் எனது மருமகனுக்கு ஆதரவளிக்க வேண்டும். அதேவேளை சச்சின் டெண்டுல்கர் தனது 100 ஆவது சர்வதேச சதத்தை இப்போட்டியில் பெற வேண்டும் எனவும் நான் விரும்புகிறேன். அது நடந்தால் இலங்கை அணியின் வெற்றிவாய்ப்பு குறையும். எனவே எனக்கு குழப்பமாகவுள்ளது' என அவர் கூறியுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0

  • acord4 Saturday, 02 April 2011 11:09 PM

    சச்சின் 100 அடித்தால் ஸ்ரீலங்காவுக்கு வெற்றி நிச்சயம்

    Reply : 0       0

    xlntgson 0776994341;0716597735 sms only Monday, 04 April 2011 09:04 PM

    முரளியின் தேச பக்தியை சந்தேகத்துக்குள்ளாக்கும் இது போன்ற கருத்துகள்! அவர் இலங்கை வெல்ல வேண்டுமா இந்தியா வெல்ல வேண்டுமா என்று குழம்பி போய் விட்டதே போல- மாமியின் கருத்து தெரிகிறது! நானும் இந்தியப் பெண்ணை மணந்தவன் தான், ந்ம்க்ம்... ம்க்கும்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .