2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஒருநாள், 20 ஓவர் போட்டிகளுக்கான அணித்தலைவர் பதவியிலிருந்து சங்கக்கார ராஜினாமா

Super User   / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


ஒருநாள் சர்வதேச போட்டி, மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கான அணித்தலைவர் பதவியிலிருந்து குமார் சங்கக்கார இன்று செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்துள்ளார்.

அதேவேளை எதிர்வரும் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய தொடர்கள் வரை தேர்வுக்குழுவினர் விரும்பினால் டெஸ்ட் அணிக்கு தலைமை தாங்கத் தயார் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

எனினும், தற்போதைக்கு போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் திட்டமில்லை  எனவும்  'இன்னும்    2-3 வருடங்களுக்கு நான் விளையாடுவேன்' எனவும் அவர் கூறியுள்ளார்.

உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் இலங்கை அணி தோல்வியுற்று சில தினங்களில் குமார் சங்கக்கார ராஜினாமா செய்துள்ளார். எனினும் இத்தீர்மானம் 2011 உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு முன்னரே மேற்கொள்ளப்பட்டதாகும் என அவர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'அடுத்த உலகக்கிண்ண போட்டிகளின்போது எனக்கு 37 வயதாகியிருக்கும். அதனால் அணியில் எனது இடத்தை என்னால் உறுதிப்படுத்த முடியாது. அச்சுற்றுப்போட்டியின்போது சிறந்த நிலையில் இருக்கக்கூடிய இளம் தலைவர் ஒருவர் இலங்கை அணிக்கு தலைமை தாங்குவது நல்லது.

 கடந்த 2 வருடங்களாக அணித்தலைவராக நாட்டிற்கு சேவையாற்றக் கிடைத்தமை உண்மையில் பெரும் கௌரவமாகும். இறுதிப்போட்டியில் வெற்றி பெற முடியாவிட்டாலும் அணியின் செயற்பாடுகள் குறித்து நான் பெருமையடைகிறேன்.

உலகெங்கும் இலங்கை ஆதரவளர்களிடமிருந்து கிடைத்த ஆதரவுக்கு நான் நன்றியுடையவன்.  எமது ஆதரவாளர்கள் போட்டியின் போதும் அதற்கு முன்னரும் பின்னரும் பெரும் உந்துசக்தியாக இருந்தார்கள்.

தேர்வுக்குழுவினரை நான் திங்களன்று சந்தித்து இத்தீர்மானம் குறித்த காரணத்தை விளக்கினேன். புதிய அணித்தலைவர் அப்பதவியில் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக நான் உறுதியளித்தேன்.

இதன் காரணமாக எதிர்வரும் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய சுற்றுலாக்களுக்கு தேர்வுக்குழுவினர் நன்மையளிக்கும் எனக் கருதினால் நான் டெஸ்ட் அணித்தலைவராக நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளேன்.

இப்போதைய நிலையில் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் எண்ணமில்லை. அது எனது உடற்திடநிலை, செயற்பாட்டு நிலை என்பவற்றில் தங்கியுள்ளது.

எனது அணி சகாக்கள், பயிற்சியளிக்கும் உத்தியோகஸ்தர்கள் ஆகியோருக்கு அவர்களின் கடின முயற்சிக்காக நன்றி கூறுகிறேன். நான் அணிக்குத் தலைமை தாங்க அனுமதிப்பதற்காக அவர்கள் செய்த தியாகங்களுக்காக எனது மனைவி யெஹாலிக்கும் எனது இளம் இரட்டைக்குழந்தைகளுக்கும் எனதுகுடும்பத்தினருக்கும் நான் நன்றி கூறுகிறேன்.'

(Pix by: Pradeep Pathirana)



 


You May Also Like

  Comments - 0

  • Thilak Tuesday, 05 April 2011 08:49 PM

    ஒரு சுற்றுப்போட்டியில் ஒரு அணி தான் வெல்லலாம். 14 அணிகளில் இரண்டாம் பெற்றீர்கள். இந்நிலையில் ஏன் இந்த முடிவு?

    Reply : 0       0

    Niththi Tuesday, 05 April 2011 08:53 PM

    முரளியும் ஓய்வு பெற்றுவிட்டார். மஹேல மீண்டும் தலைவராக வாய்ப்பு குறைவு. இனி அடுத்த தலைமைக்கு பொருத்தமானவர் யார்?

    Reply : 0       0

    xlntgson Tuesday, 05 April 2011 09:14 PM

    யாராக இருந்தாலும் சரி, விமர்சனங்களுக்கு பயப்படாதவராக இருந்தால் சரி!

    Reply : 0       0

    suji Tuesday, 05 April 2011 11:07 PM

    வர் சுaமாக விலகுகிறாuh , இல்லை மனவேதனையால் விலகுகிறார..மலிங்க அடுத்தமுறை உலக கோப்பை போட்டிகளில் விளையாட விருப்பமில்லை என்றார்.. தோற்றுக் கொண்டு நாடு திரும்பியவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு கொடுத்தாங்க.. எல்லாம் அரசியல் என்கிறது விளங்குதா..

    Reply : 0       0

    zuhair ali Tuesday, 05 April 2011 11:29 PM

    இது உண்மையில் கவலைக்குரிய விடயமும் சிந்திக்க வேண்டிய விடயமும்தான் ஏன் என்றால் அவர் ஒரு நல்ல நுணுக்கமும்,அறிவும்,ஒழுக்கமும், தலைமைத்துவமும் தெரிந்த ஒரு நல்ல திறமையுள்ள விளையாட்டு வீரர் மாத்திரமல்லாமல் ஒரு நல்ல உலகம் பேசும் முன்மாதிரி தலைவரகவும் இருக்குறார். இவரைப்போன்ற ஒரு நல்ல தலைமைத்துவம் அமைய வாழ்த்துக்கள்....

    Reply : 0       0

    suji Wednesday, 06 April 2011 12:29 AM

    இந்த முடிவு சரியானதா..ஒரு சிறந்த தலைவர் இப்படி முடிவெடுப்பது சுயமாகவா, இல்லை அரசியல் காரனங்களுகாகவா, இறுதிப் போட்டியில் என்ன நடந்தது, திடீர் என குப்பையான முரண்பாடான களத் தடுப்புகள், இலகுவான பந்துப் பரிமாற்றங்கள்.. தடுமாற்றமான முடிவுகள்.. எல்லாமே ஒரு அரசியல் நாடகங்கள்.. மலிங்க அடுத்த உலக கோப்பையில் விளையாட மாட்டாராம்..விருப்பம் இல்லையாம், ஏன் இந்த மன உடைவு.. திறமையானவர்கள் ஏமாற்றப் பட்டமை.. இதுக்குள்ள திறமையாக வென்ற மாதிரி பெரிய வெற்றிக் களிப்பு இந்தியாவுக்கு..

    Reply : 0       0

    jeni Wednesday, 06 April 2011 05:40 PM

    இறுதிவரை போட்டிக்கு வராமலே போய்விட்டார்கள் பலர்.ஆனால் உங்களது தலைமையில்தான் இலங்கை அணிக்கு அந்த வாய்ப்பு கிட்டியது.பாரட்டக் கூடிய விடயம். இடையில் ஏன் இந்த திடீர் முடிவு?

    Reply : 0       0

    Dr. Javahir Wednesday, 06 April 2011 06:01 PM

    A great Captain!

    Reply : 0       0

    jaliyath Wednesday, 06 April 2011 06:48 PM

    உண்மையாகவே அவர் சிறந்த கப்டன் பட் கொஞ்சம் விவேகம் குறைவு .அவருக்குப் பின்னால் யார் வந்தாலும் நல்லமுறையாக வழி நடாத்த நம் வாழ்த்துக்கள்.உண்மையாக சிலர் குறிப்பாக தமிழ் பேசக்குடியவர்கள் இந்தியாவை ஆதரித்து பட்டாசு கொளுத்தியது தேசத்துரோகமான செயல்
    அவர்கள் இலங்கையர்கள் என்று சொல்லவே வெட்கப்படவேண்டும்

    Reply : 0       0

    zatheer Thursday, 07 April 2011 03:07 PM

    ஆமாம் உண்மைதான் தனது நாட்டில் இருந்து வேறு ஒரு நாட்டிற்கு ஆதரவு வழங்குவது ஒரு முட்டாள் தனமானது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .