2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

இலங்கை அணி மீது குற்றம் சுமத்தினால் ஆதாரங்களை முன்வையுங்கள்: முரளி

Super User   / 2011 ஜூன் 09 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை கிரிக்கெட் அணி தொடர்பாக குற்றச்சாட்டுகளை சுமத்துவபவர்கள்; அதற்கான ஆதாரங்களை வைத்திருக்க வேண்டும் என இலங்கையின் உலக சாதனை சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

39 வயதான முரளிதரன் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ள நிலையில் தற்போது இங்கிலாந்தின் பிராந்திய போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்குச் சென்றுள்ளார்.

அங்கு, இலங்கை கிரிக்கெட் துறையில் 1992 ஆம் ஆண்டிலிருந்து ஆட்டநிர்ணய சதி இடம்பெற்று வருவதாக முன்னாள் அணித்தலைவர் ஹசான் திலகரட்ன தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு முரளிதரன் பதிலளிக்கையில், அவர் (ஹசான்) சில ஆதாரங்களை வைத்திருக்க வேண்டும். ஆதாரம் மிக முக்கியம் ஆதாரமில்லாமல் குற்றம் சுமத்தக்கூடாது' என்றார்.

தான்  அறிந்தவரை எந்த போட்டியும் முடிவும் முறையற்றவிதமாக நிர்ணயிக்கப்பட்டதாக தெரியவில்லை என முரளி கூறினார்.

'எந்தவொரு வீரரும் இப்படி இப்படி செய்தமைக்காக அவர்களை நான் சந்தேகப்பட முடியாது.  ஏனெனில் சில வீரர்கள் மோசமான அடியொன்றை அடிக்கலாம். மோசமாக பந்துவீசலாம். அது அவர்களின் நிலையைப் பொறுத்தது.

எனவே இந்த குற்றச்சாட்டுகள் வரலாம். ஆனால் எவரேனும் தவறு செய்தார்கள் என்பதை நிரூபிப்பதற்கு அதிக ஆதாரங்கள் வேண்டும். இதுவரை நான் அறிந்த வகையில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. இது எனது கருத்து. ஆனால் எவரேனும் ஆதாரங்களை முன்வைத்து நிரூபித்தால் எனது எண்ணம் தவறாகக் கூடும்' என முரளிதரன் தெரிவித்தார்.
 
 


You May Also Like

  Comments - 0

  • Fahim Friday, 10 June 2011 01:59 PM

    முரளிதரனும் அவருடன் முன்னர் விளையாடியோரும் உண்மையிலேயே நல்ல முறையில் விளையாடியதாகத்தான் ஏராளமானோர் நம்புகின்றனர். எனினும், அண்மையில் இலங்கைக் கிரிக்கெட் அணியில் சேர்ந்தோர் பற்றி மக்களுக்கு நம்பிக்கையில்லை.

    Reply : 0       0

    nisar Monday, 20 June 2011 07:10 AM

    இந்த கருத்து சரியானவை. இதை நான் வரவேற்கின்றேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .