2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மழையின் உதவியுடன் தப்பியது இலங்கை அணி

Super User   / 2011 செப்டெம்பர் 12 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை  - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.

பள்ளேகல சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியின் 4 ஆவது நாளான நேற்றைய ஆட்டமுடிவின்போது இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 223 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஆனால் இன்று  பிற்பகல் 307 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இலங்கை அணியின் 5 ஆவது விக்கெட் வீழ்ந்தது.

இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 317 ஓட்டங்களைப் பெற்று நெருக்கடியில் இருந்தபோது மழை பெய்யத் தொடங்கியது. அதன்பின் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது இலங்கை அணி 80 ஓட்டங்களால் மாத்திரேம முன்னிலையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக அவுஸ்திரேலிய வீரர் மைக் ஹஸி தெரிவானார்.

இத்தொடரின் 3 ஆவதும் இறுதியுமான போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X