2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அஸ்வினின் அபூர்வ சாதனை

Super User   / 2011 நவம்பர் 25 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மேற்கிந்திய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் துடுப்பாட்டத்திலும் சதம் குவித்துள்ளார்.

மும்பையில் நடைபெறும் இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 25 வயது வீரரான அஸ்வின் 156 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்;த்தினார். போட்டியின் நான்காவது நாளான இன்று அவர் துடுப்பாட்டத்தில் தனது முதல் டெஸ்ட் சதத்தை பெற்றார்.

118 பந்துகளில் 15 பெண்டரிகள், 2 சிக்ஸர்களையும் அவர் அடித்தார்.

மேற்கிந்திய அணியுடனான தொடரில் தான் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளுக்கு அறிமுகமானார். தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே அவர் போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை வென்றமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது போட்டியில்  மேற்கிந்திய அணி முதல் இன்னிங்ஸில் 590 ஓட்டங்களைப் பெற இந்திய அணி 483 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அஸ்வின் மாத்திரமே சதம் குவித்தார். டெண்டுல்கர் 94 ஓட்டங்களையும் ராகுல் திராவிட் 82 ஓட்டங்களையும் பெற்றனர்.

ராகுல் திராவிட் வருடமொன்றில் 1000 இற்கு மேற்பட்ட டெஸ்ட் ஓட்டங்களைக் குவித்த இரண்டாவது மிக வயதான வீரரானார். 1948 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் டொனால்ட் பிரட்மன் தனது 40 ஆவது வயதில் 1000 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்தியாவின் 79 வருடகால டெஸ்ட் கிரிக்கெட வரலாற்றில் அவ்வணி வீரர் ஒருவர்  டெஸ்ட் போட்டியொன்றில் ஒர் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவதுடன் துடுப்பாட்டத்திலும் சதம் குவிப்பது இது மூன்றாவது தடவையாகும்.

1952 ஆம் ஆண்டு வினு மன்காட் இங்கிலாந்து அணிக்கெதிராக லோர்ட்ஸ் மைதானத்திலும் 1962 ஆம் ஆண்டு பொலி உம்ரிகர் மேற்கிந்திய அணிக்கெதிராக போர்ட் ஒவ் ஸ்பெய்ன் நகரிலும் இச்சாதனையை படைத்திருந்தனர்.

அனைத்துலக ரீதியில் இத்தகைய சாதனை படைத்த வீரர்கள் மொத்தமாக 20 பேர்தான் (27 தடவைகள்) சொற்ப எண்ணிக்கையிலேயே உள்ளனர்.

இங்கிலாந்து வீரர் இயன்பொத்தம் 5 தடவை இச்சாதனையைப் படைத்துள்ளார். கெரி சோபர்ஸ், முஸ்தாக் மொஹமட், ஜக் கலிஸ் ஆகியோர் இரு தடவை இச்சாதனையை படைத்துள்ளனர். 

விபரம்:


தொடர்புடைய செய்தி:

6 ஓட்டங்களால் 100 ஆவது  சதத்தை தவறவிட்டார் சச்சின்


You May Also Like

  Comments - 0

  • Jeganram Saturday, 26 November 2011 05:35 AM

    வாழ்த்துக்கள் அஸ்வின்

    Reply : 0       0

    Ganesh Saturday, 26 November 2011 09:42 PM

    இம்ரான் கான், வாசிம் அக்ரம் முஹம்மது ALSO WANT TO REMIND THIS TIME but Mohamed Khan double 100 in 1973. I hope no one can't break this record for 200 years.

    Reply : 0       0

    GM Sunday, 27 November 2011 04:33 AM

    ஆல் தி பெஸ்ட் ... Asvin

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X