2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ரோஜர் பெடரரின் புதிய சாதனை

Super User   / 2011 நவம்பர் 28 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லண்டனில் நடைபெற்ற தொழிற்சார் டென்னிஸ் வீரர்கள் சங்கத்தின் (ஏ.டி.பி) சுற்றுப்போட்டியில் சுவிட்ஸர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் சம்பியனாகியுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் பிரெஞ்சு வீரர் ஜோ வில்பரட் சோங்காவை 6-3,6-7, 6-3 விகிதத்தில் பெடரர் தோற்கடித்தார்.

இதன்மூலம் டென்னிஸ் உலகின் மற்றொரு சாதனையையும் தனதாக்கிக் கொண்டார் பெடரர். வருடத்தின் இறுதியில் நடைபெறும் ஏ.டி.பி. சுற்றுப்போட்டியொன்றில் அதிக தடவை சம்பியனாகிய வீரர் எனும் சாதனையே இதுவாகும்.

6 ஆவதுதடவையாக வருடத்தின் இறுதி ஏ.டி.பி. போட்டியில் பெடரர் சம்பியனாகியுள்ளார். இதுவரை  ரோஜர் பெடரர், பீட் சாம்ப்ராஸ், ஐவன் லென்ட்டில் ஆகியோர் சமநிலையில் இருந்தனர்.

30 வயதான பெடரர் தனது டென்னிஸ் வாழ்க்கையில் விளையாடிய தனது 100 ஆவது இறுதிப்போட்டி இதுவாகும். இவற்றில் 70 போட்டிகளில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

ஏற்கெனவே அதிக கிராண்ட்ஸ்லாம் சுற்றுப்போட்டிகளில் (16) சம்பியனாகிய வீரர் எனும் சாதனை உட்பட பல சாதனைகளை ரோஜர் பெடரர் தன்னகத்தே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகின் முன்னாள் முதல் நிலை வீரரான ரோஜர் பெடரர் அண்மைக்காலத்தில் தரவரிசையில் பின்தங்கியிருந்தார். இந்நிலையில் இப்போது அவர் 3 ஆம்இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 


You May Also Like

  Comments - 0

  • meebavan Tuesday, 29 November 2011 12:23 AM

    நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரோஜெர் பெடரரின் நேர்த்தியான விளையாட்டுக்கு கிடைத்த வெற்றியாகும். ஏ.டி.பி. சம்பியன் விருது பெற்ற வயது கூடிய (30) போட்டியாளரும் இவரேயாகும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .