2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முதல் நாளில் முடிவில் தென்னாபிரிக்கா சிறப்பான ஆட்டம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 09 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று ஆரம்பித்தது. இன்றைய முதல் நாள் முடிவில் தென்னாபிரிக்க அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திச் சிறப்பான நிலையில் காணப்படுகிறது.

பிறிஸ்பேணில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி இன்றைய நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 255 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முதலாவது விக்கெட்டாக அணித்தலைவர் கிரேம் ஸ்மித்தை அணி 29 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது தென்னாபிரிக்க அணி இழந்தது. எனினும் இரண்டாவது விக்கெட்டுக்காக அல்விரோ பீற்றர்சனும், ஹசிம் அம்லாவும் 90 ஓட்டங்களையும், அதன் பின்னர் மூன்றாவத விக்கெட்டுக்காக ஹசிம் அம்லாவும், ஜக்ஸ் கலிஸும் பிரிக்கப்படாத 139 ஓட்டங்களையும் பகிர்ந்தனர்.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பாக ஹசிம் அம்லா ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்களையும், ஜக்ஸ் கலிஸ் ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களையும், அல்விரோ பீற்றர்சன் 64 ஓட்டங்களையும் கைப்பற்றினர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக ஜேம்ஸ் பற்றின்சன், நேதன் லையன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை இடம்பெறவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .