2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜே.பி.டுமினி காயமடைந்தார், முதற்போட்டியில் சந்தேகம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 10 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர் ஜே.பி.டுமினி 6 மாதங்களுக்குப் போட்டிகளில் பங்குபற்றமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் போட்டி முடிவடைந்த பின்னர் காயமடைந்ததையடுத்தே அவர் 6 மாதங்கள் போட்டிகளில் பங்குபற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி தனது முதலாவது டெஸ்ட் போட்டியை நேற்று ஆரம்பித்தது. இப்போட்டியில் தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. தென்னாபிரிக்க அணி சார்பாக ஜே.பி.டுமினி 7ஆம் இலக்கத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கவிருந்தார்.

இந்நிலையில் நேற்றைய நாள் ஆட்டம் நிறைவடைந்ததையடுத்து இடம்பெற்ற பயிற்சிகளின் போது ஜே.பி.டுமினி சறுக்கி விழுந்ததாகவும், அதனை அடுத்து அவர் வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு அதிகமான வலி காணப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின் போது ஜே.பி.டுமினியின் குதிக்கால் தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது போட்டியில் அவர் பங்குபற்ற முடியாத நிலையில் தென்னாபிரிக்க அணியின் சமநிலை குழப்பமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7ஆம் இலக்கத்தில் முக்கியமாக ஜே.பி.டுமினியின் துடுப்பாட்டம் தேவைப்பட்டதோடு, இப்போட்டியில் தென்னாபிரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர்களை மாத்திரம் கொண்டு களமிறங்கியுள்ள நிலையில் ஜே.பி.டுமினியின் பகுதிநேரச் சுழற்பந்து வீச்சு தென்னாபிரிக்க அணிக்கு முக்கியமானது எனக் கருதப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .