2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இலங்கையின் அதிதூர சைக்கிளோட்டத் தொடர்

A.P.Mathan   / 2012 நவம்பர் 10 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்று 7 வருடங்கள் கடந்துள்ளமையை நினைவுபடுத்தும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எலைட் சைக்கிளோட்டச் சுற்றுத் தொடர் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தத் தொடர் 5 நாட்களில் 732 கிலோ மீற்றர்களைக் கடப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தொடர் இலங்கை விமானப்படைத் தலைமையகத்திற்கு முன்னாலிருந்து ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

புத்தளம், அநுராதபுரம், மதவாச்சி, வவுனியா, குருநாகல், வாரியப்பொல, கண்டி வீதியினூடாக களுத்துறை ஆகிய இடங்களைச் சென்றடையவுள்ள இந்த சைக்கிளோட்டத் தொடர், தங்கல்லையில் சென்று முடியவுள்ளது.

இப்போட்டியில் வெற்றிபெறும் வீரருக்கு 3 இலட்சம் ரூபா பணப்பரிசும், இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொள்பவருக்கு 2 இலட்சம் ரூபா பணப்பரிசும், மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொள்பவருக்கு ஓர் இலட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

தவிர, முதலிருபது இடங்களைப் பெறும் ஏனையோருக்கும் 5000 முதல் 75000 வரையிலான பணப்பரிசு வழங்கி வைக்கப்படவுள்ளது.

இலங்கையில் இடம்பெறவுள்ள அதிக தூரங்களைக் கொண்ட சைக்கிளோட்டத் தொடராக இதுவே அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .