2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

இங்கிலாந்து பிரீமியர் லீக் முடிவுகள்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 11 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெற்றுவரும் இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டிகளில் எவேர்ட்டன், ஸ்ரோக், வெஸ்ட் ப்ரோம்விச், மன்செஸ்டர் யுனைட்டட் கழகங்கள் வெற்றிபெற்றன.

ஆர்சனல் - ஃபுல்ஹாம், ரெடிங் - நோர்விச், சௌதம்டன் - ஸ்வன்சீ கழகங்களுக்கிடையிலான போட்டிகள் சமநிலையில் முடிவடைந்தன.

ஆர்சனல், ஃபுல்ஹாம் அணிகளுக்கிடையிலான போட்டி 3 : 3 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

ஆர்சனல் அணி சார்பாக 11ஆவது, 23ஆவது, 69ஆவது நிமிடங்களில் கோல்கள் பெறப்பட்டதுடன், ஃபுல்ஹாம் அணி சார்பாக 29ஆவது, 40ஆவது, 67ஆவது நிமிடங்களில் கோல்கள் பெறப்பட்டன.

போட்டியின் இறுதி நிமிடத்தில் ஆர்சனல் அணிக்கு பெனால்ட் வாய்ப்பொன்று கிடைக்கப்பெற்றபோதும் அது தவறவிடப்பட்டிருந்தது.

எவேர்ட்டன் அணிக்கும் சன்டர்லான்ட் அணிக்குமிடையிலான போட்டியில் எவேர்ட்டன் அணி 2 : 1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.

சன்டர்லான்ட் அணி சார்பாக 45ஆவது நிமிடத்தில் கோலொன்று பெறப்பட்டபோதிலும், எவேர்ட்டன் அணி சார்பாக 77ஆவது, 79ஆவது நிமிடங்களில் கோல்கள் பெறப்பட்டிருந்தன.

ரெடிங் கழகத்திற்கும் நோர்விச் கழகத்திற்குமிடையிலான போட்டியில் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெற்றுக்கொள்ளாதுவிட, போட்டி 0 : 0 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

சௌதம்டன் அணிக்கும் ஸ்வன்சீ; அணிக்குமிடையிலான போட்டி 1 : 1 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

சௌதம்டன் கழகம் சார்பாக 64ஆவது நிமிடத்திலும் ஸ்வன்சீ கழகம் சார்பாக 73ஆவது நிமிடத்திலும் கோல் பெறப்பட்டது.

ஸ்ரோக் கழகத்திற்கும் குயீன்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ் அணிக்குமிடையிலான போட்டியில் ஸ்ரோக் கழகம் வெற்றிபெற்றது. அக்கழகம் சார்பாக 52ஆவது நிமிடத்தில் கோல் பெறப்பட்டது.

வெஸ்ட் ப்ரோம்விச் கழகத்திற்கும் விகான் அத்லட்டிக் கழகத்திற்குமிடையிலான போட்டியில் வெஸ்ட் ப்ரோம்விச் கழகம் 2 : 1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. அக்கழகம் சார்பாக 31ஆவது, 43ஆவது நிமிடங்களில் கோல்கள் பெறப்பட்டதுடன், விகான் அத்லட்டிக் கழகம் சார்பாக 45ஆவது நிமிடத்தில் கோல் பெறப்பட்டது.

மன்செஸ்டர் யுனைட்டட் கழகத்திற்கும் அஸ்டன் வில்லா அணிக்குமிடையிலான போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டட் அணி 3 : 2 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.

அஸ்டன் வில்லா அணி சார்பாக 45ஆவது, 50ஆவது நிமிடங்களில் கோல்கள் பெறப்பட்டபோதிலும், மன்செஸ்டர் யுனைட்டட் அணி சார்பாக 58ஆவது, 63ஆவது, 87ஆவது நிமிடங்களில் கோல்கள் பெறப்பட்டிருந்தன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .