2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவு

Super User   / 2012 நவம்பர் 13 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்ரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும் அவுஸ்ரேலிய அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ற் தொடரின் முதலாவது போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

நான்காவது நாள் முடிவில் 4 விக்கட்டுக்களை இழந்து 487 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் இன்றைய நாளைத் தொடர்ந்த அவஸ்ரேலிய அணி 5 விக்கெட்டுக்களைத் தொடர்ச்சியாக இழந்து 565 ஓட்டங்களைப் பெற்று தனது இனிங்ஸை இடைநிறுத்தியது.

இதன் மூலம் அவுஸ்ரேலிய அணி 115 ஓட்டங்கள் முன்னிலையில் காணப்பட்டு தென்னாபிரிக்க அணிக்குத் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை வழங்கியது. துடுப்பாட்டத்தில் அவுஸ்ரேலிய அணி சார்பாக மைக்கல் கிளார்க் ஆட்டமிழக்காமல் 259 ஓட்டங்களையும் எட் கொவான் 136 ஓட்டங்களையும் மைக்கல் ஹசி 100 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக மோர்னி மோர்க்கல் 3 விக்கெட்டுக்களையும்இ டேல் ஸ்ரெய்ன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்த இனிங்ஸில் தென்னாபிரிக்க அணி 23 முறையற்ற பந்துகளை வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

115 ஓட்டங்கள் பின்னிலையில் காணப்பட்ட நிலையில் தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றுக் காணப்பட்ட போது போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொள்ள அவுஸ்ரேலிய அணி சம்மதித்ததையடுத்துப் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பாக ஜக்ஸ் கலிஸ் 49 ஓட்டங்களையும் ஹசிம் அம்லா 38 ஓட்டங்களையும் ஏ.பி.டி. வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அவுஸ்ரேலிய அணி சார்பாக ஜேம்ஸ் பற்றின்சன், நேதன் லையன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் பீற்றர் சிடில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 450 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்ததோடு, இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக முழுமையாக இடம்பெற்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

போட்டியின் நாயகனாக அவுஸ்ரேலிய அணியின் தலைவர் மைக்கல் கிளார்க் தெரிவானார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X