2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரச்சினைகளற்ற இந்திய - பாகிஸ்தான் தொடர் தொடர்பாக நம்பிக்கை: அக்ரம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 14 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரச்சினைகளற்ற இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர்பாக நம்பிக்கையுடன் காணப்படுவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் வசீம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்திற்காக டிசெம்பர் மாத இறுதியில் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளது. இதன்போது அவ்வணி 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், 2 டுவென்டி டுவென்டி போட்டிகளில் பங்குபெறவுள்ளது.

இந்நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத்தொடர் நிறுத்தப்பட வேண்டும் என இந்தியாவைச் சேர்ந்த இந்து அமைப்புக்கள் சில கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக இந்திய அரசைக் கோரிக்கை விடுத்துள்ள அமைப்புக்கள், இத்தொடருக்கெதிராக போராட்டங்களை ஏற்பாடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள வசீம் அக்ரம், இந்த எதிர்ப்புக்களை இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரு சிறந்த உந்துகையாகக் கருத்திற் கொண்டு இத்தொடரைச் சிறப்பான தொடராக ஏற்பாடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இத்தொடர் எப்போது இடம்பெறும் என்பதை ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தொடரை மகிழ்ச்சிக்குரியாகவும், பாதுகாப்பானதாகவும் இந்திய அரசு ஏற்பாடு செய்யும் எனத் தான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த வசீம் அக்ரம், முழு உலகமே இந்தத் தொடரை எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு இந்தத் தொடர் மிகுந்த சிறப்பான தொடராக இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .