2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இரண்டாம் நாள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் ஆதிக்கம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 14 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும், பங்களாதேஷ் அணிக்குமிடையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் இரண்டாம் நாள் முடிவிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி சிறப்பான நிலையில் காணப்படுகிறது. ஆனால், பங்களாதேஷ் அணி ஓரளவு சிறந்த பதிலடியை வழங்கியுள்ளது.

4 விக்கெட்டுக்களை இழந்து 361 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் இன்றைய நாளைத் தொடர்ந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 527 ஓட்டங்களைப் பெற்று தனது இனிங்ஸை இடைநிறுத்தியது. அவ்வணி சார்பாக 5ஆவது விக்கெட்டுக்காகப் பிரிக்கப்படாத 296 ஓட்டங்கள் பகிரப்பட்டிருந்தன.

துடுப்பாட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக ஷிவ்நரின் சந்தர்போல் ஆட்டமிழக்காமல் 203 ஓட்டங்களையும், டினேஷ் ராம்டின் ஆட்டமிழக்காமல் 126 ஓட்டங்களையும், கெரான் பவல் 117 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக சொஹக் கஷி 3 விக்கெட்டுக்களையும், ஷகாதத் ஹொசைன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதன்பின்னர் தனது இனிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி இன்றைய நாள் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அவ்வணி சார்பாக முன்வரிசை வீரர்கள் அதிரடியாக ஆடியிருந்தனர்.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பாக தமிம் இக்பால் 71 பந்துகளில் 72 ஓட்டங்களையும், ஷகாரியார் நபீஸ் 27 பந்துகளில் 31 ஓட்டங்களையும், நயீம் இஸ்லாம் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக ரவி ராம்போல் 2 விக்கெட்டுக்களையும், டரன் சமி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை இடம்பெறவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X