2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்தியாவிற்கெதிராக போராடுகிறது இங்கிலாந்து

Menaka Mookandi   / 2012 நவம்பர் 17 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும், இந்திய அணிக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்றாகும்.

இன்றைய நாள் முடிவில் இங்கிலாந்து அணி "பொலோ ஒன்" முறையில் துடுப்பெடுத்தாடுகின்ற போதிலும் போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிய அணி பெற்ற 521 ஓட்டங்களுக்குப் பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி நேற்றைய நாள் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 41 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் இன்றைய நாள் ஆட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

பின்வரிசை வீரர்கள் பொறுப்பாக ஆடிய போதிலும் இங்கிலாந்து அணியால் போதுமானளவு ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கவில்லை.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக மற் பிரயர் 48 ஓட்டங்களையும், அலஸ்ரெயர் குக் 41 ஓட்டங்களையும், ஸ்ருவேர்ட் ப்ரோட் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக பிரக்ஜான் ஓஜா 5 விக்கெட்டுக்களையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 3 விக்கெட்டுக்களையும், ஷகீர் கான், உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

330 ஓட்டங்கள் பின்னிலையில் காணப்பட்ட நிலையில் "பொலோ ஒன்" முறையில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி இன்றைய நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 111 ஓட்டங்களைப் பெற்றுப் போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணியின் வசம் 10 விக்கெட்டுக்கள் உள்ள நிலையில் இனிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க இங்கிலாந்து அணி மேலதிகமாக 219 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக அலஸ்ரெயர் குக் ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களையும், நிக் கொம்ப்டன் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நாளையாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .