2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

டெஸ்ற் போட்டிகளை பிற்போடுவது புரிந்து கொள்ளப்படக்கூடியது: மஹேல

Kogilavani   / 2012 நவம்பர் 18 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணி பங்குபற்றும் டெஸ்ற் போட்டிகளை இலங்கை கிரிக்கெட் சபை பிற்போடுவதை புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபை அண்மைக்காலத்தில் டெஸ்ற் போட்டிகளைப் பிற்போட்டு கொண்டதோடு அவற்றிற்கு பதிலாக ஒருநாள் சர்வதேச போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தது.

குறிப்பாக மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான டெஸ்ற் தொடர் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக இந்திய, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் பங்குகொள்ளும் முக்கோண ஒருநாள் சர்வதேசப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

மறுபுறத்தில் அடுத்தாண்டு இடம்பெறவிருந்த தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ற் தொடர் 2015ஆம் ஆண்டுவரை பிற்போடப்பட்டுள்ளது.
இலங்கையின் ஸ்ரீPலங்கா பிறீமியர் லீக் தொடருக்காகவே இது பிற்போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கருத்து தெரிவித்த மஹேல ஜெயவர்தன, இலங்கை கிரிக்கெட் சபையின் நிதி நிலை முக்கியமானது என தெரிவித்தார்.

வீரர்களாக தாங்கள் அடுத்த 12 மாதங்களுக்கு ஊதியம் வழங்கப்படாது காணப்படப் போகின்றோமா, இலங்கையின் உள்ளூர் வீரர்களுக்கு உதியம் வழங்கப்படாது போகப் போகிறதா, இலங்கையின் உள்ளூர்ப் போட்டிகள் நிதி நெருக்கடி காரணமாக நடைபெறாது போகப் போகிறதா இல்லை டெஸ்ற் போட்டிகளை பிற்போட்டு போட்டி அட்டவணையை மாற்றுவதா என்பதை அறிய வேண்டும் என தெரிவித்தார்.

இந்த முடிவுகள் கடினமான முடிவுகள் என தெரிவித்த மஹேல ஜெயவர்தன, அந்த முடிவுகள் குறித்து இரண்டு வகையான கருத்துக்கள் காணப்படும் எனவும் தெரிவித்தார்.

சிலர் அந்த முடிவுகளை விரும்ப மாட்டார்கள் எனவும் சிலர் அந்த முடிவுகளுக்கான காரணங்களை புரிந்து கொள்வார்கள் எனவும் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .