2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இரண்டாவது போட்டியில் ஷேன் வொற்சன் இல்லை

A.P.Mathan   / 2012 நவம்பர் 21 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டிக்கான அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அறிவிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய அணியில் ஷேன் வொற்சன் மீண்டும் சேர்க்கப்படவில்லை. இதன் காரணமாக முதலாவது போட்டியில் பங்குபற்றிய அதே அணியே மீண்டும் இரண்டாவது போட்டிக்காகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக ஷேன் வொற்சன் முதலாவது போட்டியில் பங்குபற்றியிருக்காத நிலையில் இரண்டாவது போட்டியில் தனியே துடுப்பாட்ட வீரராக மாத்திரம் களமிறங்கும் உடற்தகுதியைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், நாளை ஆரம்பமாகவுள்ள போட்டியில் ஷேன் வொற்சனைச் சேர்ப்பதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளைய போட்டியில் பங்குபெறவுள்ள தென்னாபிரிக்க அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள அணியில் முதலாவது போட்டியில் பங்குபற்றிய அணியில் 2 மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

முதலாவது போட்டியில் அணியில் சேர்க்கப்பட்ட பின்னர் போட்டியில் பங்குபற்றாமலேயே காயமடைந்த மத்தியவரிசைத் துடுப்பாட்ட வீரர் ஜே.பி.டுமினி இற்குப் பதிலாக பஃப் டு பிளெஸிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று முதலாவது போட்டியில் தனது அறிமுகத்தை மேற்கொண்ட ரோறி கிளெய்ன்வெல்ட்டிற்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் சேர்க்கப்பட்டுள்ளார்.

நாளைய போட்டிக்கான அணிகள்:

அவுஸ்திரேலியா:
மைக்கல் கிளார்க், டேவிட் வோணர், எட் கோவன், ஷேன் வொற்சன், றிக்கி பொன்டிங், மைக்கல் ஹசி, மத்தியூ வேட், பீற்றர் சிடில், ஜேம்ஸ் பற்றின்சன், பென் ஹில்பன்ஹோஸ், நேதன் லையன்.

தென்னாபிரிக்கா:
கிரேம் ஸ்மித், அல்விரோ பீற்றர்சன், ஹசிம் அம்லா, ஜக்ஸ் கலிஸ், ஏ.பி.டி.வில்லியர்ஸ், ஜக்ஸ் ருடோல்ப், பஃப் டு பிளெஸிஸ், வேர்ணன் பிலாந்தர், மோர்னி மோர்க்கல், டேல் ஸ்ரெய்ன், இம்ரான் தாஹிர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .