2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மூன்றாம் நாளில் இந்திய, இங்கிலாந்து அணிகள் போராட்டம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 15 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும், இந்திய அணிக்குமிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3ஆவது நாள் ஆட்டம் இன்றாகும். இன்றைய நாள் முடிவில் இரு அணிகளும் போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன.

4 விக்கெட்டுக்களை இழந்து 87 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் இன்றைய நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணி இன்றைய நாள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 297 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 5ஆவது விக்கெட்டுக்காக மகேந்திரசிங் டோணி, விராத் கோலி இருவரும் 198 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக விராத் கோலி 103 ஓட்டங்களையும், மகேந்திரசிங் டோணி 99 ஓட்டங்களையும் பெற்றனர். மகேந்திரசிங் டோணி 99 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்திருந்தார். தவிர, கௌதம் கம்பீர் 37 ஓட்டங்களையும், செற்றேஸ்வர் புஜாரா 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஜேம்ஸ் அன்டர்சன் 4 விக்கெட்டுக்களையும், கிரேம் ஸ்வான் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

நாக்பூரில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இனிங்ஸில் 330 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதன்படி முதல் இனிங்ஸில் இந்திய அணி 33 ஓட்டங்களால் பின்னிலை வகிக்கிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X