2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முழு நாட்டுக்குமான பரிசு: மொஹமட் ஹபீஸ்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணிக்கெதிராக நேற்றுப் பெற்றுக்கொண்ட வெற்றி - முழு நாட்டுக்குமான பரிசு என பாகிஸ்தான் அணியின் தலைவர் மொஹமட் ஹபீஸ் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பாகிஸ்தானில் விடுமுறை தினமென்பதை ஞாபகப்படுத்திய அவர், இந்த வெற்றி மிகச்சிறப்பானது எனத் தெரிவித்தார்.

நேற்று பெங்களூரில் இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றிருந்தது. இந்தியாவின் 133 ஓட்டங்களுக்குப் பதிலளித்த பாகிஸ்தான் அணி முதல் 3 விக்கெட்டுக்களையும் விரைவாக இழந்த போதிலும், அதன் பின்னர் மொஹமட் ஹபீஸ், சொய்ப் மலிக் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வென்றது.

இதில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடும்போது ஒரு கட்டத்தில் 77 ஓட்டங்களுக்கு விக்கெட் எதனையும் இழக்காது காணப்பட்ட போதிலும், அதன் பின்னர் விக்கெட்டுக்களைத் தொடர்ச்சியாக இழந்து 133 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

இத்தொடரின் ஆரம்பத்தில் சிறப்பான ஆரம்பத்தைப் பெற விரும்பியதாகத் தெரிவித்த மொஹமட் ஹபீஸ், தங்களது அணியின் பந்துவீச்சுச் சிறப்பானது என்பதை அறிவோம் எனவும், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாகச் செயற்பட்டு இந்திய அணிணியைக் கட்டுப்படுத்தியதாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணி சார்பாக நேற்றைய தினம் 7 அடி, ஓர் அங்குலம் உயரமான மொஹமட் இர்பான் தனது டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டி அறிமுகத்தை மேற்கொண்டிருந்த நிலையில், அவர் இந்திய அணிக்கு ஆச்சரியத்தை வழங்கியதாகத் தெரிவித்த மொஹமட் ஹபீஸ், உமர் குல்லும் சிறப்பாகப் பந்துவீசியதாகத் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .