2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இந்திய, பாகிஸ்தான் போட்டி இன்று

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும், இந்திய அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டுவென்டி டுவென்டி தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

அஹமதாபாத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டி இன்று மாலை 5 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இரு அணிகளுக்குமிடையில் பெங்களூரில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றிருந்த நிலையில் இத்தொடரைச் சமப்படுத்திக்கொள்ள இந்திய அணி இப்போட்டியில் வெற்றிபெற்றேயாக வேண்டுமென்ற நிலை காணப்படுகின்றது.

முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் இறுதி 10 ஓவர்களில் மிகச்சிறப்பான பந்துவீச்சுத் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி தனது துடுப்பாட்டப் பெறுபேறுகளைச் சிறப்பாக வெளிப்படுத்த வேண்டிய நிலை காணப்படுகிறது.

இன்றைய போட்டி இடம்பெறவுள்ள அஹமதாபாத் ஆடுகளம் மெதுவான, திரும்பும் தன்மையை வழங்கக்கூடிய ஆடுகளம் என்பதால் இரு அணிகளின் சுழற்பந்து வீச்சாளர்களும் அதிக முக்கியத்துவம் பெறுவர் எனக் கருதப்படுகிறது.

பாகிஸ்தான் அணி சார்பாக முதலாவது போட்டியில் பங்குபற்றிய அதே அணியே இன்றைய போட்டியிலும் பங்குபற்றும் என எதிர்பார்க்கப்படுவதோடு, இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவிற்குப் பதிலாக ரவிச்சந்திரன் அஷ்வின் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் அணிகள்:
இந்தியா: கௌதம் கம்பீர், அஜின்கியா ரஹானே, விராத் கோலி, யுவ்ராஜ் சிங், மகேந்திரசிங் டோணி, சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, புவனேஷ்வர் குமார், ரவிச்சந்திரன் அஷ்வின், இஷாந்த் சர்மா, அஷோக் டின்டா.

பாகிஸ்தான்: நசீம் ஜம்ஷெத், அஹமட் ஷெஷாத், மொஹமட் ஹபீஸ், உமர் அக்மல், சொய்ப் மலிக், கம்ரன் அக்மல், ஷகிட் அப்ரிடி, சொஹைல் தன்வீர், உமர் குல், சயீட் அஜ்மல், மொஹமட் இர்பான்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .