2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விராத் கோலியின் உபாதை ஆபத்திற்குரியதல்ல

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் விராத் கோலிக்கு ஏற்பட்ட உபாதை ஆரம்பத்தில் எண்ணப்பட்டது போன்று ஆபத்திற்குரியதல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற போட்டியிலேயே விராத் கோலி உபாதைக்குள்ளாகியிருந்தார்.

நேற்றைய போட்டியில் விராத் கோலி பந்துவீசும்போது முழங்கால் பகுதியில் உபாதைக்குள்ளாகியிருந்தார். பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும்போது 41ஆவது ஓவரில் இந்த உபாதை ஏற்பட்டிருந்தது. உடனடியாகவே அவர் மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தார்.

முழங்கால் பகுதியில் உபாதை ஏற்பட்டிருந்ததன் காரணமாக அவ்வுபாதை அபாயகரமானதாக அமைந்திருக்கலாம் எனக் கருதப்பட்டது. எனினும் இந்தியக் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி விராத் கோலியின் உபாதை எதிர்பார்க்கப்பட்டளவிற்கு அபாயகரமானதாக அமையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 3ஆம் திகதி இடம்பெறவுள்ள 2ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் விராத் கோலி பங்குபெறுவாரா இல்லையா என்ற முடிவு சில நாட்களில் எடுக்கப்படுமெனத் தெரிவித்துள்ள இந்தியக் கிரிக்கெட் சபை, விராத் கோலிக்கான சிகிச்சை தொடர்ந்தும் வழங்கப்படுமெனவும் தெரிவித்துள்ளது.

3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்னிலையில் உள்ள நிலையில் விராத் கோலி இரண்டாவது போட்டியில் பங்குபெறாவிட்டால் இந்திய அணிக்கு அது இழப்பாக அமையும் எனக் கருதப்படுகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .