2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மெல்பேர்ண் போட்டி தொடர்பாக சங்கா கவலை

Kogilavani   / 2013 ஜனவரி 01 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 'பொக்சிங் டே' டெஸ்ற் போட்டியில் இலங்கை அணி மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்தியமை குறித்து வருத்தமடைவதாக இலங்கை அணியின் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி பொக்சிங் டே டெஸ்ற் போட்டியில் மெல்பேர்ண் மைதானத்தில் 1995ஆம் ஆண்டுக்குப் பின்னர் பங்குபற்றியதில்லை என்ற நிலையில் மெல்பேர்ண் போட்டி முக்கியமானதாக அமைந்திருந்தது.

எனினும் அப்போட்டியில் இலங்கை அணி ஓர் இனிங்ஸ் மற்றும்; 201 ஓட்டங்களால் படுதோல்வியடைந்திருந்தது.

அதுகுறித்து கருத்துத் தெரிவித்த குமார் சங்கக்கார, மெல்பேர்ண் போட்டி மிகப்பெரிய சந்தர்ப்பமாக அமைந்ததாகவும், ஓர் அணியாக அனைவரும் அப்போட்டியின் திறமை வெளிப்பாடுகள் தொடர்பாக மிகவும் வருத்தமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மெல்பேர்ணில் வெளிப்படுத்திய திறமையை விடச் சிறப்பான திறமையை வெளிப்படுத்தும் திறமை இலங்கை அணிக்கு உண்டு எனவும் அவர் தெரிவித்தார்.

அப்போட்டியில் போட்டித்தன்மையை வழங்குமளவிற்கு இலங்கை அணியின் துடுப்பாட்டம் இருந்திருக்கவில்லை எனத் தெரிவித்த குமார் சங்கக்கார, அதற்கான பொறுப்பை அணியாக ஏற்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்தோடு இவ்வாறான விடயங்கள் கிரிக்கெட்டில் இடம்பெறுவதுண்டு எனவும் தெரிவித்தார்.

மெல்பேர்ண் போட்டியில் முதல் இனிங்ஸில் அரைச்சதம் பெற்ற குமார் சங்கக்கார டெஸ்ற் போட்டிகளில் தனது 10,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்ததோடு, இரண்டாவது இனிங்ஸில் விரலில் காயமடைந்து சத்திரசிகிச்சைக்குள்ளாகியுள்ளததால் இத்தொடர் முழுவதும் இனிமேல் பங்குபெற மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .