2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிட்னி போட்டி உணர்வுபூர்வமாக அமையும்: பீற்றர் சிடில்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 01 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ற் போட்டி உணர்வுபூர்வமானதாக அமையும் என எதிர்பார்ப்பதாக அவுஸ்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பீற்றர் சிடில் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரும், அவுஸ்ரேலியாவோடு நெருங்கிய உறவுகளைக் கொண்டதோடு, அங்கு வசித்து வந்தவருமான ரொனி கிரெய்க் இன் மரணம், அவுஸ்ரேலிய அணியின் மத்தியவரிசைத் துடுப்பாட்ட வீரர் மைக்கல் ஹசியின் இறுதி டெஸ்ற் போட்டி ஆகியன காரணமாகவே அப்போட்டி உணர்வுபூர்வமாக அமையும் என பீற்றர் சிடில் தெரிவித்துள்ளார்.

ரொனி கிரெய்க், மைக்கல் ஹசி பற்றிய செய்திகளை அறிவதற்கு ஏமாற்றகரமானதாக அமைந்ததாகத் தெரிவித்த பீற்றர் சிடில், அதன் காரணமாக இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ற் போட்டி உணர்வுபூர்வமானதாக அமையும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இளைய வீரர்கள் ரொனி கிரெய்க் கிரிக்கெட் உலகத்திற்கும், அவுஸ்ரேலிய கிரிக்கெட்டிற்கும் ஆற்றிய சேவைகளைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள் எனத் தெரிவித்த பீற்றர் சிடில், அவர் அவரது இழப்பு கவலை தருவதாகத் தெரிவித்தார்.

சிட்னி போட்டியில் அவுஸ்ரேலிய அணி ரொனி கிரெய்க், மைக்கல் ஹசி இருவரையும் கௌரவிக்கும் முகமாகப் போட்டியில் பங்குபற்றுமெனத் தெரிவித்த பீற்றர் சிடில், சிறப்பான பெறுபேறு குறித்து எதிர்பார்ப்புடன் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .