2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தென்னாபிரிக்காவிற்கு எதிராக போராடுகிறது நியூசிலாந்து

Menaka Mookandi   / 2013 ஜனவரி 04 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும், தென்னாபிரிக்க அணிக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் தென்னாபிரிக்க அணி போட்டியில் ஆதிக்கத்துடன் இன்னமும் காணப்படுகிறது.

3 விக்கெட்டுக்களை இழந்து 252 ஓட்டங்களுடன் காணப்பட்ட தென்னாபிரிக்க அணி நேற்றைய நாளில் 8 விக்கெட்டுக்களை இழந்து 347 ஓட்டங்களைப் பெற்று தனது இனிங்ஸை இடைநிறுத்தியது. இது நியூசிலாந்து அணி முதல் இனிங்ஸில் பெற்ற 45 ஓட்டங்களை விட 302 ஓட்டங்கள் அதிகமாகும்.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பாக அல்விரோ பீற்றர்சன் 106 ஓட்டங்களையும், ஏபி.டி.வில்லியர்ஸ் 67 ஓட்டங்களையும், ஹசிம் அம்லா 66 ஓட்டங்களையும், ஜக்ஸ் கலிஸ் 60 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக கிறிஸ் மார்ட்டின், ட்ரென்ட் போல்ட்ற் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், டக் பிரேஸ்வெல், ஜேம்ஸ் ஃபிராங்ளின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

302 ஓட்டங்கள் பின்னிலையில் காணப்பட்ட நிலையில் தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணி நேற்றைய நாள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இதன் மூலம் 6 விக்கெட்டுக்கள் கைவசமுள்ள நிலையில் நியூசிலாந்து அணி இனிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க 133 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது. துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பாக டீன் ஃபிரௌண்லி ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களையும், பிரென்டன் மக்கலம் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக ஜக்ஸ் கலிஸ் 2 விக்கெட்டுக்களையும், டேல் ஸ்ரெய்ன், ரொபின் பீற்றர்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X