2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இந்தியாவுடன் ஆஷஷ் போன்ற தொடர் வேண்டும்: ஷாகா அஷ்ரப்

A.P.Mathan   / 2013 ஜனவரி 04 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, பாகிஸ்தான் அணிகள் சரித்திரப்பூர்வமிக்க ஆஷஷ் தொடர் போன்ற டெஸ்ட் தொடரொன்றை நடாத்த வேண்டுமென பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ஷாகா அஷ்ரப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான கிரிக்கெட் உறவுகள் மேம்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெறும் வரலாற்றுப்புகழ் மிக்க டெஸ்ட் தொடரான ஆஷஷ் தொடர் அதிமுக்கியம் வாய்ந்த தொடர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்நிலையிலேயே அதுபோன்றதொரு தொடரை இந்திய, பாகிஸ்தானிய நாடுகளுக்கிடையில் ஏற்பாடு செய்யும் விருப்பத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளிப்படுத்தியுள்ளது.

அவ்வாறானதொரு தொடரொன்றை ஏற்பாடு செய்வது குறித்துப் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஏற்கனவே சிந்தித்துள்ளதாகத் தெரிவித்த ஷாகா அஷ்ரப், குறித்த திட்டம் குறித்து இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடம் தெரிவித்துள்ளதாகவும், ஒவ்வொரு வருடமும் அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவையும் இத்தொடரை விளையாட எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரு நாட்டுக் கிரிக்கெட் சபைகளுக்குமிடையிலான கிரிக்கெட் உறவுகள் மேம்படைந்துள்ளதாகத் தெரிவித்த ஷாகா அஷ்ரப், கிரிக்கெட் உறவுகள் மாத்திரமன்றி இரு நாட்டுப் பிரதமர்களும் சிறந்த புரிந்துகொள்ளலில் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையில் அவ்வாறான தொடரொன்று ஏற்பாடு செய்யப்பட்டால் அத்தொடரை பாகிஸ்தானின் தேசத் தந்தையான மொஹமது அலி ஜின்னாவின் பெயரிலேயோ அல்லது இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பெரிலேயோ நடாத்தலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .