2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இரண்டாவது போட்டியில் வேர்ணன் பிலாந்தர் சந்தேகம்

Kogilavani   / 2013 ஜனவரி 05 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும், தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ற் போட்டியில் தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் வேர்ணன் பிலாந்தர் பங்குகொள்வது சந்தேகத்திற்குரியது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டியின் போது வேர்ணன் பிலாந்தர் காயமடைந்துள்ளதையடுத்தே அடுத்த போட்டியில் அவர் பங்குபற்றுவது குறித்த சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

அவரது பின்தொடைத் தசைப்பகுதியிலேயே உபாதை ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணியின் இரண்டாவது இனிங்ஸில் 24 ஓவர்களை வீசிய வேர்ணன் பிலாந்தர், தனது 24வது ஓவரை வீசிய பின்பு மைதானத்திலிருந்து வெளியேறியிருந்தார்.

இதன்போது தனது இடது பின்தொடைப் பகுதியில்; நோவை அவர் உணர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பந்துவீசும் போது வழுக்கியதன் காரணமாக அவருக்கு இந்த நோ ஏற்பட்டதாகவும், அது விரைவில் குணமடையும் என அவர் எதிர்பார்ப்பினை வெளியிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முகாமையாளரின் கருத்துப்படி அவரது உபாதை தொடர்பாக தென்னாபிரிக்கக் கிரிக்கெட் சபை அதிக கவனமெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ற் போட்டியில் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி ஓர் இனிங்ஸ் மற்றும் 27 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்ததோடு, போட்டியில் 7 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்த வேர்ணன் பிலாந்தர் போட்டியின் நாயகனாகத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .