2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மகளிர் உலகக்கிண்ணத்தில் பாகிஸ்தானைத் தோற்கடித்தது இந்தியா

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 07 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் இடம்பெற்றுவரும் மகளிர் உலகக்கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் இன்று இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வெற்றிகொண்டுள்ளது. 7ம் இடத்திற்கான போட்டியிலேயே இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

கட்டாக்கில் இடம்பெற்ற போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது.
முதலாவது விக்கெட்டை 6 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி, அதன் பின்னர் ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுக்களை இழந்து 60 ஓட்டங்களுடன் காணப்பட்ட போதிலும், விக்கெட்டுக்கள் சீரான இடைவெளியில் வீழ்த்தப்பட்டிருந்தன.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக நீடா டார் 83 பந்துகளில் 68 ஓட்டங்களையும், பிஸ்மா மரூப் 113 பந்துகளில் 58 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக நாகராஜன் நிரஞ்சனா 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், ஜூலன் கோஸ்வாமி 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், எக்தா பிஸ்த் 50 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 46 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. முதலாவது விக்கெட்டை 8 ஓட்டங்களுக்கும், 2வது விக்கெட்டை 51 ஓட்டங்களுக்கும் இழந்த போதிலும், தொடர்ந்து வந்த வீராங்கனைகள் சிறப்பாக ஆடி வெற்றி இலக்கை அடைய உதவினர்.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக அணித்தலைவி மித்தாலி ராஜ் 141 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 103 ஓட்டங்களையும், திருஷ் காமினி 44 பந்துகளிலவ் 26 ஓட்டங்களையும், றீமா மல்கோத்ரா 48 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக குவானிற்றா ஜாலில், பிஸ்மா மரூப், நீடா டார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இப்போட்டியின் நாயகியாக இந்திய அணியின் தலைவி மித்தாலி ராஜ் தெரிவானார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X