2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நியூசிலாந்தைத் தோற்கடித்தது இங்கிலாந்து

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 09 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்திற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும், நியூசிலாந்து அணிக்குமுிடையிலான 3 போட்டிகள் கொண்ட டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி 40 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

ஒக்லான்டில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 214 ஓட்டங்களைக் குவித்தது.
முதலாவது விக்கெட் 29 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட போதிலும், தொடர்ந்து வந்த வீரர்கள் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக ஒய்ன் மோர்கன் 26 பந்துகளில் 46 ஓட்டங்களையும், லூக் ரைட் 20 பந்துகளில் 42 ஓட்டங்களையும், ஜோனி பெயர்ஸ்ரோ 22 பந்துகளில் 38 ஓட்டங்களையும், ஜொஸ் பட்லர் 16 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக ட்ரென்ட் போல்ட்ற், ரொனி ஹீரா, அன்ட்ரூ எலிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், மிற்சல் மக்லநகன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

215 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 40 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

முதலாவது விக்கெட்டுக்காக 31 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி, அதன் பின்னர் சீரா இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியிருந்தது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பாக மார்ட்டின் கப்ரில் 32 பந்துகளில் 44 ஓட்டங்களையும், கொலின் முன்ரோ 19 பந்துகளில் 28 ஓட்டங்களையும், ரொனி ஹீரா 11 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஸ்ருவேர்ட் ப்ரோட் 4 விக்கெட்டுக்களையும், ஸ்டீவன் ஃபின் 3 விக்கெட்டுக்களையும், லூக் ரைட் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X