2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஐ.பி.எல் உரிமையாளர்கள் தவறு செய்யவில்லை: விசாரணை முடிவு

Super User   / 2013 ஜூலை 29 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக் அணிகளின் உரிமையாளர்கள் குற்றங்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் எவையும் கிடைக்கப்பெறவில்லை என இந்தியன் பிறீமியர் லீக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்யப்பட நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வாண்டுக்கான இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் போது அணியின் உரிமையாளர்கள் சூதாட்டங்களில் ஈடுபட்டார்கள் என பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்துஇ அது தொடர்பாக விசாரணை செய்வதற்காக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவரைக் கொண்ட விசாரணைக்குழுவொன்றை இந்தியக் கிரிக்கெட் சபை நியமித்திருந்தது.

இநு;து விசாரணைகளின் முடிவில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்வாகம் அதன் உரிமையாளர் ராஜ் குந்த்ரா, சென்னை சுப்பர் கிங்ஸ் உரிமையாளர்களான இந்தியன் சிமென்ட்ஸ் நிறுவனம் ஆகியோர் குற்றங்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை என அறிவிக்கப்படுகிறது.

சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த விசாரணை அறிக்கை இந்தியன் பிறீமியர் லீக் அமைப்பின் நிர்வாகக் குழுவிற்கு எதிர்வரும் ஓகஸ்ற் 2ஆம் திகதி சமர்ப்பிக்கப்படுகிறது.

இந்தியன் பிறீமியர் லீக்கின் இவ்வருடத் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டார் எனத் தெரிவித்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் உயர் நிர்வாக உறுப்பினரும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவரின் மருமகனுமான குருநாத் மெய்யப்பன், அவரோடு தொடர்புகளைக் கொண்டிருந்த விந்து தாரா சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் 3 வீரர்களின் கைதுகளுக்குப் பின்பு இவர்களின் கைது இடம்பெற்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X