2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கலைக்கப்பட்டது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 16 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அந்நாட்டின் பிரதமரால் கலைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் சபையின் காப்பாளர் என்ற வகையில் பிரதமர் நவாஸ் ஷெரிப் அந்நாட்டுக் கிரிக்கெட் சபையைக் கலைத்துள்ளார்.

கலைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்குப் பதிலாக 5 பேர் கொண்ட இடைக்கால முகாமைத்துவக் குழுவொன்றும் பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் இடைக்காலத் தலைவராகப் பதவி வகித்த நஜம் சேதி, முன்னாள் கிரிக்கெட் சபைத் தலைவர் ஷகாரியார் கான், முன்னாள் வீரர்கள் ஸகீர் அப்பாஸ், ஹரூன் றஷீத் ஆகியோரோடு, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் முகாமையாளரான நவீட் சீமாவும் இக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் காப்பாளரான பாகிஸ்தானின் பிரதமர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் யாப்பின் 41ஆவது பகுதியின்படி கிரிக்கெட் சபையைக் கலைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

எனினும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் நாளுக்குநாள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உள்ளூர், சர்வதேச தொடர்புகளைத் தொடர்ந்தும் பேணுவதற்குமாக 5 பேர் கொண்ட இடைக்கால முகாமைத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .