2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாகிஸ்தானுக்கெதிராக வெற்றியை நோக்கி தென்னாபிரிக்கா

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 25 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு இராச்சியத்திற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும், பாகிஸ்தான் அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றியை நோக்கிப் பயணித்துள்ளது.
 
4 விக்கெட்டுக்களை இழந்து 460 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த தென்னாபிரிக்க அணி, 517 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
 
துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பாக கிறேம் ஸ்மித் 234 ஓட்டங்களையும், ஏபி.டி.வில்லியர்ஸ் 164 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எந்த வீரரும் 30 ஓட்டங்களுக்கு அதிகமாகப் பெற்றிருக்கவில்லை.
 
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக சயீட் அஜ்மல் 6 விக்கெட்டுக்களையும், மொஹமட் இர்பான் 3 விக்கெட்டுக்களையும், சுல்பிகர் பாபர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
 
418 ஓட்டங்கள் பின்னிலையில் காணப்பட்ட நிலையில் தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி, இன்றைய நாள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களுடன் காணப்படுகிறது.
 
ஓட்டமெதனையும் பெறாது முதலாவது விக்கெட்டையும், 2 ஓட்டங்களுடன் 2ஆவது விக்கெட்டையும் இழந்த அவ்வணி, 4 விக்கெட்டுக்களை இழந்து 70 ஓட்டங்களுடன் தடுமாறியது. 5ஆவது விக்கெட்டுக்காக மிஸ்பா உல் ஹக், அசத் ஷபீக் இருவரும் 62 ஓட்டங்களைப் பிரிக்கப்படா இணைப்பாட்டமாகப் பகிர்ந்தனர்.
 
துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக மிஸ்பா உல் ஹக் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களையும், யுனிஸ் கான் 36 ஓட்டங்களையும், அசத் ஷபீக் ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
பந்துவீச்சில் டேல் ஸ்ரெய்ன், வேர்ணன் பிலாந்தர், ஜே.பி.டுமினி, இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
 
இதன் போது இன்றைய தினத்தில் தென்னாபிரிக்க அணி பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியமை உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு, பாகிஸ்தான் அணி 5 ஓட்டங்கள் மேலதிகமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 99 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .