2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்திற்கெதிராக அவுஸ்திரேலியா முழு ஆதிக்கம்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஷ் டெஸ்ட் தொடரில் பங்குபற்றிவரும் இங்கிலாந்து அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் அவுஸ்திரேலிய அணி முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.
 
5 விக்கெட்டுக்களை இழந்து 273 ஓட்டங்களுடன் இன்றைய நாளை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 9 விக்கெட்டுக்களை இழந்து 570 ஓட்டங்களுடன் தனது முதலாவது இனிங்ஸை இடைநிறுத்தியது.
 
6ஆவது விக்கெட்டுக்காக மைக்கல் கிளார்க், பிரட் ஹடின் இருவரும் 200 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அத்தோடு 3 விக்கெட்டுக்காக 96 ஓட்டங்கள் பகிரப்பட்டிருந்தன.
 
துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பாக மைக்கல் கிளார்க் 148 ஓட்டங்களையும், பிரட் ஹடின் 118 ஓட்டங்களையும், கிறிஸ் றொஜர்ஸ் 72 ஓட்டங்களையும், றயன் ஹரிஸ் இறுதி நேரத்தில் 54 பந்துகளில் ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களையும், ஜோர்ஜ் பெய்லி 53 ஓட்டங்களையும், ஷேன் வொற்சன் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஸ்ருவேர்ட் ப்ரோட் 3 விக்கெட்டுக்களையும், கிறேம் ஸ்வான், பென் ஸ்ரோக்ஸ் இருவரும் தலா 2 விக்கெட்டுக்களையும், ஜேம்ஸ் அன்டர்சன், மொன்ரி பனசர் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
 
தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி இன்றைய நாள் முடிவில் 21 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 35 ஓட்டங்களுடன் காணப்படுகிறது. இதன்படி அவ்வணியின் வசம் 9 விக்கெட்டுக்கள் உள்ள நிலையில் அவ்வணி 535 ஓட்டங்களால் பின்னிலை வகிக்கிறது.
 
இங்கிலாந்தின் அணித்தலைவர் அலஸ்ரெயர் குக்கை அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிற்சல் ஜோன்சன் ஆட்டமிழக்கச் செய்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .