2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நெதர்லாந்திடம் தப்பியது தென் ஆபிரிக்கா

A.P.Mathan   / 2014 மார்ச் 28 , மு.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெதர்லாந்து, தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையில் நடைபெற்ற உலக 20-20 தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 6 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. நெதர்லாந்து அணியின் பந்துவீச்சு இறுக்கமாக இருந்தபோதும் துடுப்பாட்டம் போதியளவு சோபிக்கத் தவறியமையே தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய தென் ஆபிரிக்க அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் ஹாசிம் அம்லா 43 ஓட்டங்களையும், பப் டு ப்லேசிஸ் 24 ஓட்டங்களையும், AB DE வில்லியர்ஸ் 21 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நெதர்லாந்து அணி சார்பாக அஷான் மாலிக் ஜாமில் 19 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்களை கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பாடிய நெதர்லாந்து அணி 18.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஸ்டீபன் மைபெர்க் 51 ஓட்டங்களையும், டொம் கூப்பர் 16 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் தென் ஆப்ரிக்க அணி சார்பாக இம்ரான் தாகிர் 4 விக்கெட்களையும், டேல் ஸ்டைன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக இம்ரான் தாகிர் தெரிவு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் தென் ஆபிரிக்க அணி 4 புள்ளிகளைப் பெற்று, குழு 1 இல் இரண்டாம் இடத்தில் தொடர்ந்தும் உள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .