2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொல்கொத்தா அணிக்கு வெற்றி

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொல்கொத்த நைட் ரைடேர்ஸ் அணிக்கும், பெங்களூரு ரோயல் சலஞ்செர்ஸ் அணிக்குமிடையில் நடைபெற்ற  இறுக்கமான போட்டியில் கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணி வெற்றி பெற்றது. இறுதி நேரத்தில்  கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவும், இறுக்கமாகவும் பந்துவீசியதன் மூலம் தமது அணிக்கு இந்த வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர். இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய  கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது. இதில் க்ரிஸ் லைன் 45 (31 பந்துகள், 4 ஓட்டங்கள் 3, 6 ஓட்டங்கள் 3) ஓட்டங்களையும், ஜக்ஸ் கலிஸ்  43(42 பந்துகள், 4 ஓட்டங்கள் 2, 6 ஓட்டங்கள் 1) ஓட்டங்களையும், சூரியகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 24 (18 பந்துகள், 4 ஓட்டங்கள் 1, 6 ஓட்டங்கள் 1) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வருண் ஆரோன் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், மிச்சல் ஸ்டார்க் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய பெங்களூரு ரோயல் சலஞ்செர்ஸ் அணி வெற்றிக்கான வாய்ப்புக்களை ஆரம்பம் முதல் தன் பக்கமாகவே வைத்து இருந்தது. இறுதி ஓவரில் வெற்றிக்கு 9 ஓட்டங்கள் தேவை என்ற நிலை இருந்தது. இறுதி 5 ஓவர்கள் கொல்கொத்த நைட் ரைடேர்ஸ் அணி பந்து வீச்சாளர்களால் சிறப்பாகவும், இறுக்கமாகவும் வீசப்பட்டது. இதன் மூலம் வெற்றியைப் பெற்றுக் கொண்டனர். பெங்களூரு ரோயல் சலஞ்செர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது. இதில் யோகேஷ் தக்கவாலி 40 (28 பந்துகள், 4 ஓட்டங்கள் 8) ஓட்டங்களையும், விராத் கோலி 31 (23 பந்துகள், 4 ஓட்டங்கள் 3) ஓட்டங்களையும், யுவராஜ் சிங் 31(34 பந்துகள், 4 ஓட்டங்கள் 2, 6 ஓட்டங்கள் 1) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வினைக்குமார் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், உமேஷ் யாதவ், ஜக்ஸ் கலிஸ், சுனில் நரையன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக  க்ரிஸ் லைன் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் கொல்கொத்த நைட் ரைடேர்ஸ் அணி 4 புள்ளிகளைப் பெற்று நான்காமிடத்திற்கு முன்னேறியுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .