2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆர்ஜன்டீனா, பெல்ஜியம் அணிகள் காலிறுதியில்

A.P.Mathan   / 2014 ஜூலை 02 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் நேற்று நடைபெற்றன. இதில் ஆர்ஜன்டீனா மற்றும் பெல்ஜியம் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. 
 
ஆர்ஜன்டீனா, சுவிட்ஸர்லாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல்களை அடிக்கவில்லை. மேலதிக நேரமாக வழங்கப்பட்ட 30 நிமிடங்களில் 118வது நிமிடத்தில் ஆர்ஜன்டீனா வீரர் ஏஞ்செல் டி மரியா அடித்த கோல் மூலம் ஆர்ஜன்டீனா அணி 1 இற்கு 0 என வெற்றி பெற்றது. போட்டியின் நாயகனாக நான்காவது தடவையாக லியனல் மெஸ்ஸி தெரிவானார். எட்டாவது தடவையாக ஆர்ஜன்டீனா அணி காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.  
 
பெல்ஜியம், அமெரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டி கோல்கள் இன்றி சமநிலையில் நிறைவடைய மேலதிக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதில் பெல்ஜியம் அணி 2 கோல்களையும், அமெரிக்கா அணி ஒரு கோலையும் பெற்றன. பெல்ஜியம் அணி 2 இற்கு 1 என்ற ரீதியில் வெற்றி பெற்றது. பெல்ஜியம் அணி சார்பாக கெவின் டி புரூனே 93 வது நிமிடத்தில் முதல் கோலை அடித்த அதேவேளை இரண்டாவது கோலை ரொமேலு லுகாகு 105 வது நிமிடத்தில் அடித்தார். 107 வது நிமிடத்தில் அமெரிக்கா வீரர் ஜூலியன் கிரீன் தனது அணிக்கான கோலை அடித்தார். போட்டியின் நாயகனாக அமெரிக்காவின் கோல் காப்பாளர் ரிம் ஹோவார்ட் தெரிவு செய்யப்பட்டார். பெல்ஜியம் அணி இரண்டாவது தடவை காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. 86 ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடரில் முதற் தடையாக காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தது. அந்த தொடரில் அரை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது. 
 
இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற, ஆர்ஜன்டீனா, பெல்ஜியம் அணிகள் காலிறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .