2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

2015 உலகக்கிண்ண தொடக்கப் போட்டியில் இலங்கை, நியூசிலாந்து அணிகள்

A.P.Mathan   / 2013 ஜூலை 30 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் இடம்பெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி பங்குபற்றவுள்ளது. முதலாவது போட்டியில் இலங்கை அணி, போட்டியை நடாத்தும் நாடுகளில் ஒன்றான நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.
 
சர்வதேசக் கிரிக்கெட் சபையால் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள போட்டி அட்டவணையிலேயே இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
 
2015ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள இத்தொடர், மார்ச் 29ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இத்தொடரில் மொத்தமாக 49 போட்டிகள் இடம்பெறவுள்ளன.
 
சர்வதேசக் கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கான முழுமையான அந்தஸ்தினை உடைய 10 நாடுகளான அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து, பங்களாதேஷ், சிம்பாப்வே ஆகிய நாடுகளோடு, 4 நாடுகள் தகுதிகாண் போட்டிகள் மூலமாக இத்தொடருக்குத் தகுதிபெறவுள்ளன. இதில் அயர்லாந்து ஏற்கனவே தகுதிபெற்றுள்ளது.
 
14 அணிகளும் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு குழுநிலையில் போட்டிகள் இடம்பெறவுள்ளன. குழுநிலைப் போட்டிகளில் அந்தந்தக் குழுவில் முதல் 4 இடங்களைப் பெறும் அணிகள் காலிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெறும்.
 
காலிறுதிப் போட்டிகளிலிருந்து பின்னர் அரையிறுதிப் போட்டிகளும், இறுதிப் போட்டியும் இடம்பெறும்.
 
குழு "ஏ": இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இலங்கை, பங்களாதேஷ், நியூசிலாந்து, தகுதிகாண் அணி 2, தகுதிகாண் அணி 3
 
குழு "பி": தென்னாபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், சிம்பாப்வே, தகுதிகாண் அணி 1 (அயர்லாந்து), தகுதிகாண் அணி 4
 
போட்டி அட்டவணை:

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .