2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

3 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம்: தில்ஷான்

Super User   / 2011 ஜூன் 08 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து அணியுடனான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கான உடற்திட நிலை தனக்கு இல்லாமல் போகலாம் என இலங்கை அணியின் தலைவர் திலகரட்ன தில்ஷான் அச்சம் தெரிவித்துள்ளார். வலது கை பெருவிரலில் ஏற்பட்ட காயமொன்றே இதற்குக் காரணம்.

'தற்போதைய நிலையில் நான் 3 ஆவது போட்டியில் இல்லை என்றே எண்ணுகிறேன்' என அவர் நேற்று கூறினார். 

நேற்றுமுடிவுற்ற இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 193 ஓட்டங்களைப் பெற்ற தில்ஷான், இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவானமை குறிப்பிடத்தக்கது. 

ஆனால் நேற்றைய இறுதிநாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் அவர்  துடுப்பெடுத்தாடவில்லை. தேவையேற்படின் அவர் துடுப்பெடுத்தாடுவதற்கு தயாராக இருந்தபோதிலும் தனது வழக்கமான ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் நிலையிலிருந்து அவர் தன்னை கீழிறக்கிக் கொண்டார்.

' இக்காயம் குணமடைவதற்கு  3-4 வாரகால ஓய்வு தேவைப்படும் என டாக்டர்களும் உடற்கூற்று மருத்துவரும் அறிவுறுத்தியுள்ளனர். 3 ஆவது போட்டி ஆரம்பமாகுவதற்கு இன்னும் 10 நாட்கள்தான் உள்ளன. விரைவாக குணமடைந்தால் நான் அப்போட்டியில் விளையாடுவேன். இல்லாவிட்டால் இளம் வீரர் ஒருவருக்கு அவ்வாய்ப்பை வழங்கிவிட்டு ஒருநாள் சுற்றுப்போட்டிக்கு தயாராகுவேன்' என திலகரட்ன தில்ஷான் தெரிவித்துள்ளார்.

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 16 திகதி முதல் சௌதம்ப்டன் நகரில் நடைபெறவுள்ளது.

இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 486 ஓட்டங்களையும் இலங்கை அணி 479 ஓட்டங்களையும் பெற்றன. 

இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 335 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. முதல் இன்னிங்ஸில் 4 ஓட்டங்களால் சதத்தை தவறவிட் அலிஸ்டயர் குக் இரண்டாவது இன்னிங்ஸில் 106 ஓட்டங்களைப் பெற்றார்.

இறுதிநாளன செவ்வாய்க்கிழமை தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 127 ஓட்டங்களைப் பெற்றபோது இப்போட்டி முடிவுற்றது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X