2024 மார்ச் 28, வியாழக்கிழமை

3ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்திற்கெதிராக அவுஸ்திரேலியா சிறப்பான ஆட்டம்

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆஷஷ் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் முடிவில் அவுஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. முதல் நாள் முடிவில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 303 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
 
ஓல்ட் ட்ரபோர்ட் மைதானத்தில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
 
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி முதலாவது விக்கெட்டுக்காக 16.5 ஓவர்களில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்த அவுஸ்திரேலிய அணி சார்பாக முதலாவது விக்கெட்டாக ஷேன் வொற்சன் 19 ஓட்டங்களுடன் வீழ்ந்தார். அதன் பின்னர் உஸ்மான் கவாஜா சர்ச்சைக்குரிய விதத்தில் ஆட்டமிழப்பு வழங்கப்பட, சிறப்பாக ஆடிய கிறிஸ் றொஜர்ஸ் ஆட்டமிழக்க, அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களுடன் சற்றுத் தடுமாற்றத்தை எதிர்நோக்கியது.
 
எனினும் 4ஆவது விக்கெட்டுக்காக இணை சேர்ந்த மைக்கல் கிளார்க், ஸ்டீவன் ஸ்மித் இருவரும் பிரிக்கப்படாத 174 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவிற்கு வலுச் சேர்த்தனர்.
 
துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பாக அணித்தலைவர் மைக்கல் கிளார்க் ஆட்டமிழக்காமல் 125 ஓட்டங்களையும், கிறிஸ் றொஜர்ஸ் 84 ஓட்டங்களையும், ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக கிறேம் ஸ்வான் 2 விக்கெட்டுக்களையும், ரிம் பிரெஸ்னன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X