2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அவுஸ்திரேலியாவை 347 ஓட்டங்களால் வென்றது இங்கிலாந்து

Kogilavani   / 2013 ஜூலை 22 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆஷஷ் தொடரின் இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணியை இங்கிலாந்து அணி 347 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிகொண்டுள்ளது.

4 நாட்களில் இந்த வெற்றி பெறப்பட்டுள்ளது.

இலண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி இயன் பெல்லின் 109 ஓட்டங்கள், ஜொனி பெயர்ஸ்ரோவின் 67 ஓட்டங்கள், ஜொனதன் ட்ரொட்டின் 58 ஓட்டங்களின் துணையோடு 361 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக றயன் ஹரிஸ் 5 விக்கெட்டுக்களையும், ஸ்டீவன் ஸ்மித் 3 விக்கெட்டுக்களையும், ஜேம்ஸ் பற்றின்சன், ஷேன் வொற்சன் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 128 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

அவ்வணி சார்பாக ஷேன் வொற்சன் 30 ஓட்டங்களையும், மைக்கல் கிளார்க் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக கிறேம் ஸ்வான் 5 விக்கெட்டுக்களையும், ரிம் பிரெஸ்னன் 2 விக்கெட்டுக்களையும், ஜேம்ஸ் அன்டர்சன், ஸ்ருவேர்ட் ப்ரோட் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதன்பின்னர் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஜோ றூட்டின் 180 ஓட்டங்கள், இயன் பெல்லின் 74 ஓட்டங்களின் துணையோடு, 7 விக்கெட்டுக்களை இழந்து 349 ஓட்டங்களைப் பெற்று தனது இனிங்ஸை இடைநிறுத்தியது.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக பீற்றர் சிடில் 3 விக்கெட்டுக்களையும், றயன் ஹரிஸ் 2 விக்கெட்டுக்களையும், ஜேம்ஸ் பற்றின்சன், ஸ்டீவன் ஸ்மித் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

583 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 90.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களைப் பெற்று, 347 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பாக உஸ்மான் கவாஜா 54 ஓட்டங்களையும், மைக்கல் கிளார்க் 51 ஓட்டங்களையும், ஜேம்ஸ் பற்றின்சன் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக கிறேம் ஸ்வான் 4 விக்கெட்டுக்களையும், ஜேம்ஸ் அன்டர்சன், ஜோ றூட், ரிம் பிரெஸ்னன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக ஜோ றூட் தெரிவானார்.

5 போட்டிகள் கொண்ட இத்தொடரில், 2 போட்டிகளின் நிறைவில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X